இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!
சென்னை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:,
கடந்தமாதம் இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதான எதிர்கட்சியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு, அதன் தலைவராக இலங்கை தமிழரான இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்திகேட்டு, தமிழக எதிர்க்கட்சித்தலைவரான நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

இலங்கையின் ஒரு சிறந்த எதிர்கட்சித்தலைவராக இரா.சம்பந்தன் சிறப்பாக செயல்பட்டு போரினால் பாதிக்கப்பட்டு தங்கள் மறுவாழ்வுக்காக ஏங்கி கொண்டிருக்கும், இலங்கை தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்.
அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications