'இத்துப்போன' நடிகரை வெச்சு கேப்டனை விமர்சித்த திமுக: பொதுக்குழுவில் கொந்தளித்த பிரேமலதா

லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் பேசியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில் எங்கள் திருமண மண்டபத்தை இடித்தனர். வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இத்துபோன நடிகர் ஒருவரை வைத்து கேப்டனுக்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேச வைக்க முடியுமோ அவ்வளவு கொச்சையாக பேச வைத்தனர். அதை தங்களின் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதாவும், இப்போது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார்.
கட்சியை விட்டு எட்டு பேர் போனாலும் 80 லட்சம் தொண்டர்கள் இருக்கின்றனர். எட்டு கோடி தமிழக மக்கள் மனதில் தே.மு.தி.க. உள்ளது என்றார்.
வடிவேலுவைத்தான்..
கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அவர் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் தவறாமல் விஜயகாந்தை விமர்சித்து வந்தார். அவரது பேச்சை சன் நியூஸ் தொலைக்காட்சி சிறப்பு தொகுப்புகளாக வெளியிட்டது. இதை மனதில் வைத்துதான் பொதுக்குழுவில் 'இத்துப்போன நடிகரை வைத்து விமர்சித்த திமுக' என்று பேசியிருக்கிறார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications