Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணிலாக உதவிய விஜய்; புயலாகத் தாக்கிய ஜெ! எஸ்.ஏ.சி தந்த உளைச்சல்கள்! 13 வருட ரிவென்ஞ்!

Subscribe to Oneindia Tamil

விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டார். அது பற்றிப் பல செய்திகள் வலம் வருகின்றன. அவருக்குள் அரசியல் இருந்தது உண்மை. அது இன்று நேற்று அல்ல. ஏறக்குறைய 13 வருடக் கனவு.

பலரும் எதிர்பார்த்ததைப் போல 'காவலன்' படம் பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. விஜய் நடித்த முந்தைய படங்களின் சில நஷ்டமாகி விட்டதாகப் புகார் எழுந்தது. அதற்கு நஷ்ட ஈடு தந்தால்தான் 'காவலன்' படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

Vijays 13 years of political struggle

ஆனால், பிரச்சினை நஷ்ட ஈடு இல்லை. அதற்குப் பின்னால் பல அழுத்தங்கள் இருந்தன. அதில் அரசியல் அழுத்தமும் ஒன்று. அப்போது அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிப்பதற்காக வந்தார்.

அப்போது பிரச்சினைப் பற்றியும் படம் தாமதமாக வெளியானது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய், "ஒருவருடன் பிரச்சினை என்றால் பேசி தீர்த்துவிடலாம். யார் பிரச்சினை செய்கிறார் எனத் தெரியும். எனவே போய் சந்தித்து பிரச்சினைக்குத் தீர்த்து வைக்கலாம்.

ஆனால், இதில் எங்கே இருந்து பிரச்சினை வருகிறது என்றே தெரியவில்லை. அடுத்து பல இடங்களிலிருந்து வந்தது. ஆகவே அமைதியாக இருந்தேன். அதன் பின் ஒருநாள் தாமதமாகப் படம் வெளியானது. சில இடங்களில் அதற்குப் பின்பும் கூட படம் வெளிவருவதில் சிக்கல் இருந்தது" என்று விளக்கம் அளித்தார்.

Vijays 13 years of political struggle

விஜய்யின் படம் முதல்முதலாக சிக்கலில் சிக்கியது என்றால் அது காவலன் தான். அதற்குப் பின் 'தலைவா' தொடங்கி 'லியோ' வரை வரிசையாக அவர் படம் வெளிவருகிறது என்றாலே பிரச்சினை ஒன்று தானாக முளைக்கும் அளவுக்கு அவர் பிரபலமானார்.

முதலில் தமிழ்நாடு அளவிலிருந்த விவகாரம் பின்னாளில் பாஜகவினால் தேசிய அளவில் பேசப்பட்டார். ராகுல் காந்தியே அவருக்கு ஆதரவு தரும் அளவுக்குக் கவனிக்கப்பட்டார்.

இந்தக் காவலன் பட புரமோஷனுக்காக பேட்டி அளிக்க முன்வந்த விஜய், அதன் பிறகு தனிப்பட்ட பேட்டிகளைத் தவிர்க்கத் தொடங்கினார். அதற்குக் காரணம். படப் பிரச்சினையோடு அவர் பற்றிய அரசியல் பிரச்சினையும் சூடு பிடித்தது. அதற்கும் கூட அவர் 'காபி வித் அனு' நிகழ்ச்சியின் போதே பதிலளித்தார்.

தொகுப்பாளர் விஜய்யிடம் அரசியலுக்கு வருவீர்களா எனக் கேட்டார். அதற்கு விஜய், பூசி மழுப்பாமல் ஒரு தெளிவான பதிலை அவர் தந்தார். "நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இவ்வளவு பெரிய இடத்தில் ஒரு நடிகனாக மக்கள் என்னைக் கொண்டுவந்து உட்கார வைப்பார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. காலம் அங்கே கொண்டு போய் என்னை உட்கார வைத்தது.

Vijays 13 years of political struggle

மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு பவர் என்று ஒன்று வேண்டும். அதற்கு எனக்கு இது சரியான நேரம் இல்லை. ஒருநாள் காலம் என்னைக் கொண்டுபோய் சேர்க்கும். அப்ப நான் வருவேன்" என்றார்.

அவர் மறைமுகமாகக் காலம் என்றார். ஆனால், அது உண்மையில்லை. அவர் ஜெயலலிதாவுக்கு முன் அரசியலுக்கு வந்தால் தாக்குப் பிடிக்க முடியாது என்று அஞ்சினார். அவரது அதிகாரம் தன்னை காணாமல் செய்து விடும் என்று பயந்தார். அதற்குத்தான் காலம் என்று விசயத்தைப் பெரிதாக்காமல் பதில் சொல்லித் தப்பித்தார்.

2009 ஜூலையில் தான் விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம் என மாறியது. இதே ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியை ரகசியமாகச் சந்தித்தார்.

Vijays 13 years of political struggle

காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக வதந்தி பரவியது. இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது காங்கிரஸ். அந்த இலங்கை மக்களின் பிரதிநிதியாக உள்ள பெண்ணை திருமணம் செய்தவர் விஜய்.

ஆகவே, அவர் இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது எனப் பேச்சுகள் எழுந்தன.அப்படியே ஆஃப் ஆனார் விஜய்.

அதன்பின்னர் ஊழலுக்கு எதிராகப் பேசி 2011இல் உலகப் புகழ் பெற்றார் அன்னா ஹசாரே. உடனே அண்ணா ஹசாரேவை சந்தித்தார் விஜய்.

2011 தேர்தல் நேரத்தில் எஸ் ஏ சந்திரசேகரும் விஜய்யும் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள். அதிமுகவுக்கு ஆதரவும் தெரிவித்தார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்குக்கூட எஸ்.ஏ.சி சென்றார். அதிமுக 50 தொகுதிகளில் ஆதரவு தரவேண்டிய வேட்பாளர் பட்டியலை அளித்தது. விஜய் ரசிகர்கள் அதிமுகவுக்கு வேலை செய்தனர். இதனால் 50 தொகுதிகளில் 43 தொகுதிகளில் அதிமுக வென்றது.

இந்தவெற்றிக்குப் பின்னர் அப்பாவும் மகனும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது மீடியாவை சந்தித்த விஜய், ஜெயலலிதா முதல்வர் ஆக்குவதற்கு ஓர் அணிலாகத் தான் உதவியது மகிழ்ச்சி தருவதாகப் பேட்டி அளித்தார்.

Vijays 13 years of political struggle

இந்தப் பேச்சு ஜெயலலிதாவைக் கோபமடையச் செய்தது. இவரது ஆதரவால் தனக்கு வெற்றி கிடைத்ததாக விஜய் சொன்னது ஜெவுக்குப் பிடிக்கவில்லை. அவர் அயர்ன் லேடி. அவர் வெல்வதற்கு விஜய் காரணமா?

எனவே அதன் பிறகு தான் விஜய்க்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மறைமுக யுத்தம் தொடங்கியது. கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.

விடுவாரா ஜெயலலிதா? தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஏ.சந்திரசேகரை நீக்க சில காய்களை நகர்த்தினார். இறுதியில் எஸ்.ஏ.சி வெளியேற்றப்பட்டார்.

Vijays 13 years of political struggle

அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு விஜய் பிறந்த நாள் நிகழ்ச்சி தனியார் கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு ஆளும் தரப்பு நெருக்கடி தந்தது. மேடைகள் தக்கப்பட்டன. கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. நிகழ்ச்சி ரத்தானது.

இந்த நெருக்கடிகளால் நொந்துபோன எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த கடந்த மூன்று ஆண்டுகள் முன்னதாக, அதாவது 2020 நவம்பர் 5 ஆம் தேதி அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்திருந்தார்.

அடுத்த நொடியே பொங்கி எழுந்தார் விஜய். 'எனது பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது' என்று அப்பாவுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார்.

Vijays 13 years of political struggle

விஜய்யின் வழக்கறிஞர் எஸ்.குமரேசன் தனது கட்சிக்காரரின் விஜய்யின் ஒப்புதலின்றி, ஜூன் 8, 2020 அன்று 'அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியும், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பதிவு செய்தார்.

அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களைக் கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். கட்சிக்கும் நமக்கும் நம் இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஆவேசம் கொண்டு அறிக்கை விட்டார் விஜய்.

Vijays 13 years of political struggle

அப்பா மகன் சண்டையில் எஸ்.ஏ.சி. கட்சியின் பொருளாளராகப் பதவியில் அமர்த்தப்பட்ட ஷோபா சந்திரசேகர் தனது கையெழுத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.

"ஒரு மாதத்திற்கு முன்னால் என் கணவர் ஒரு அசோசேஷன் ஆரம்பிக்கிறேன். அதற்காகக் கையெழுத்து கேட்டார். நல்ல விசயம் தான் என்று நானும் கையெழுத்துப் போட்டேன். மீண்டும் ஒரு மாதம் கழித்து இன்னொரு முறை கேட்டார்.

அதைப் படித்துப் பார்த்தபோது கட்சி தொடங்குவதற்காகப் பதிவு செய்வதற்காகக் கேட்கிறார் என நான் புரிந்துகொண்டேன். விஜய்க்குத் தெரியாமல் செய்வதால் இதில் கையெழுத்துப் போடமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்.

Vijays 13 years of political struggle

இதைப்போன்று மீடியாவில் பேச வேண்டாம் என்று விஜய் பல முறை சொல்லி இருக்கிறார். ஆனாலும், என் கணவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் விஜய் அவரது தந்தையிடம் பேசுவதில்லை" என்று விளக்கம் அளித்தார்.

இதற்குப் பதிலளித்த எஸ்.ஏ.சி, "1993 இல் ஜனவரி மாதம் விஜய் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தேன். அவரின் முதல் ரசிகனே நான் தான். அந்த ரசிகர் மன்றத்தின் முதல் உறுப்பினரே நான் தான்" என்றார்.

கடைசியில் அவர் விஜய் பெயரில் தொடங்கிய கட்சியிலும் அவர் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டிய நிலை உருவானது.

இப்போது மகன் அதிகாரப்பூர்வமாகக் கட்சி தொடங்கி இருக்கிறார். அதில் அப்பாவுக்கு எந்தப் பதவியும் இல்லை. அதற்குக் காரணம் கடந்த காலங்களில் எஸ்.ஏ.சி.தான் விஜய்யின் செல்வாக்கை ஜெயலலிதாவின் பக்கம் மடை மாற்றம் செய்ய அழுத்தம் தந்தவர். அவர் உடன் இருந்தால், தனக்குப் பின்னடைவு என விஜய் நினைக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+