கோட்டையைப் போல் கம்பீரமாக இருக்கும் விஜய்யின் பூர்வீக வீடு.. எங்கே இருக்கிறது தெரியுமா?
முத்துப்பேட்டை: ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் ஊற்று கிராமத்தில்தான் நடிகர் விஜய்யின் பூர்வீக வீடு இருக்கிறது என்பதும். அது இதுவரை பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டு வருகின்றது என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை கிராமமான முத்துப்பேட்டைக்குத் தனது உடன்பிறந்த சகோதரருடன் சென்றிருந்தார் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது அங்கே உள்ள சர்ச் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் அமைந்திருந்த அவரது தந்தையின் கல்லறையைப் புதுப்பித்து அதற்காகச் சடங்குகளைச் செய்திருந்தார். அது ஊடகங்கள் பலவற்றால் கவனிக்கப்பட்டு செய்தியானது. அதைவிட எஸ்.ஏ.சியின் அண்ணன் ராஜசேகர் தோற்றம் அப்படியே விஜய்யைப் போலவே இருந்தது. அதனால், அவர் சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆனார்.

அப்போது பேசிய சந்திரசேகர் தனது தந்தை ஸ்டேஷன் மாஸ்டராக இருந்ததால் பல ஊர்களில் தாங்கள் வாழ்ந்ததாகவும் ஆனால், பூர்வீகம் என்றால் இந்தக் கடற்கரை கிராமம்தான் என்றும் கூறியிருந்தார். முத்துப்பேட்டை கிராமத்திற்கு முதன்முதலாக விஜய்யின் கொள்ளுத்தாத்தா சேனாதிபதி பிள்ளை குடியேறியுள்ளார். இவர் 1897 பிறந்துள்ளார். 1982இல் மறைந்துள்ளார். அவரது கல்லறை முத்துப்பேட்டை புனித வனத்து அந்தோணியார் ஆலய கல்லறையில்தான் இருக்கிறது. கடந்த 4 தலைமுறைகளாக இதே கிராமத்தில் தான் விஜய்யின் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
பொதுவாக முத்துப்பேட்டை என அடையாளப்படுத்தினாலும் விஜய்யின் தாத்தா வாழ்ந்ததும் எஸ்.ஏ.சி பிறந்ததும் தண்ணீர் ஊற்று கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில்தான். இந்த வீட்டைப் பார்த்தால் அந்தக் காலத்துப் பங்களா போல் தோற்றம் தருகிறது. இப்போது விஜய் தாத்தா வாழ்ந்த வீடு பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. எஸ்.ஏ.சி புனித காணிக்கை அன்னை ஆலயம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
பின்னர் தங்கச்சி மடம் உயர்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். இதை இந்தத் தண்ணீர் ஊற்று கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர். இங்கே பாழடைந்து கிடக்கும் சந்தன நிவாஸ் என்ற பங்களாதான் எஸ்.ஏ.எஸ். பிறந்துள்ளார். அவர் கடந்த ஜூலை மாதம் கல்லறை புதுப்பிப்பு விழாவுக்கு வந்தபோது இந்த வீட்டை அடையாளம் கண்டு மக்களிடம் கூறியுள்ளார். அதை இப்போது ஊர்க்காரர்கள் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
மற்றொரு பெண் பேசுகையில், எஸ்.ஏ.சியின் தந்தை இவரது வீட்டில்தான் வாடைக்கு ஆரம்பக் காலத்திலிருந்துள்ளார். இவர் விஜய் அப்பாவை மாமா என்றுதான் அழைப்பேன் என்கிறார். இந்த முத்துப்பேட்டை கிராமத்தில் பலர் தவெகவில் உள்ளனர். அவரது அரசியலை வரவேற்கின்றனர். ஊர்க்காரர் என்று பெருமை அவர்களின் பேச்சிலும் முகத்திலும் தாண்டவமாடுகிறது. சில இளைஞர்கள் அவர் சினிமா புகழ் அரசியல் வருகையால் கெட்டுவிடுவோம் என்று கவலை கொள்ளப் பேசி இருக்கிறார்கள்.

ஆக, தண்ணீர் ஊற்று கிராமத்தில் வாழ்ந்த விஜய்யின் தாத்தா வீடு இப்போது உள்ளது. அதை யார் பராமரிக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. முத்துப்பேட்டையில் உள்ள கல்லறைக்கு வரும் போது இந்த வீட்டுக்கும் வந்துள்ளார் எஸ்.ஏ.சி. முத்துப்பேட்டை, தங்கச்சிமடம், தண்ணீர் ஊற்று முழுக்க மீனவ கிராமம். இங்கே நிறைய மக்கள் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். விஜய்யின் தாத்தா பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்துவ மதம் பரவிய காலத்தில் இவர்கள் மதம் மாறியுள்ளனர்.
எஸ்.ஏ.எஸ். கிறிஸ்துவராக இருந்தாலும் அவரது மனைவி ஷோபா ஒரு இந்து குடுப்பத்தைச் சேர்ந்தவர். எனவே விஜய் வீட்டில் மேரி மாதா வழிபாடும் உண்டு. சாய் பாபா வழிபாடும் உண்டு. இப்போது கூட சாய்பாபா கோயிலுக்குப் போய் மாநாட்டுக்காக வழிபாடு நடத்திய விஜய்யின் பெற்றோர் அவருக்கு அணிவிப்பதற்காக ஏலக்காய் மாலையைப் பூஜை செய்து கொண்டு வந்தார்கள் என்ற செய்தி நேற்று வெளியானது. விஜய் அரசியல் முதல் மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அவரைப் பற்றிப் பல செய்திகள் ஊடகங்களில் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக விஜய்யின் பூர்வீக வீடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications