சென்னை: தமிழக முதல் அமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதையடுத்து முதல் முறையாக இன்று தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. சட்டசபையில் தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டது.
இதில் விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்கவில்லை. அதேவேளையில் இன்று காலை 10 மணிக்கு தவெகவின் 21 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் அதுபற்றிய அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாம்.
May 21, 2026, 11:24 am IST
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 அமைச்சர்களுடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
May 21, 2026, 11:16 am IST
பதவியேற்பு விழாவின் முடிவில் வந்தே மாதரம் பாடல் முதலாவதாக பாடப்பட்டது. அதன்பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் பதவியேற்பு விழா நிறைவு பெற்றது.
May 21, 2026, 11:15 am IST
தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா முடிவடைந்தது. இன்று தவெகவின் 21 எம்எல்ஏக்கள் – காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
May 21, 2026, 11:09 am IST
கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ விக்னேஷ் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 11:07 am IST
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ மரியவில்சன் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 11:05 am IST
தாம்பரம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ சரத்குமார் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 11:03 am IST
அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ முகமது பர்வாஸ் அமைச்சரானார்.
May 21, 2026, 11:02 am IST
கோவை வடக்கு சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ சம்பத்குமார் அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது கவனித்தக்கது.
May 21, 2026, 10:56 am IST
ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதியில் வென்ற தவெக எம்எல்ஏ தென்னரசு அமைச்சரானார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகையை தோற்கடித்தவர்.
May 21, 2026, 10:52 am IST
முதல்வர் விஜய் அமைச்சரவையில் வேளச்சேரி எம்எல்ஏ குமார் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:51 am IST
மதுரை மாவட்டம் மேலூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதன் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:48 am IST
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ ரமேஷ் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:46 am IST
சேலம் தெற்கு தொகுதியின் தவெக எம்எல்ஏ விஜய் தமிழன் பார்த்திபன் அமைச்சராக பதவியேற்றார்
May 21, 2026, 10:46 am IST
ராசிபுரம் தவெக எம்எல்ஏ லோகேஷ் தமிழ் செல்வன் அமைச்சராக பதவியேற்றார். இவர் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் ஆவார்.
May 21, 2026, 10:42 am IST
ஈரோடு கிழக்கு தொகுதியின் தவெக எம்எல்ஏ விஜய் பாலாஜி அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:40 am IST
கிள்ளியூர் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பின்போது முடிவில் காமராஜர் நாமம் வாழ்க, ராகுல் காந்தி வாழ்க என கூறினார். அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘இது உங்களின் உறுதிமொழியின் ஒரு பகுதியாக இல்லை’’ என சிரித்தபடி கூறினார்.
May 21, 2026, 10:37 am IST
ராஜபாளையம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ ஜெகதீஷ்வரி அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:35 am IST
ஒட்டபிடாரம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ மதன் ராஜா அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:32 am IST
அரக்கோணம் எம்எல்ஏ காந்திராஜ் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:31 am IST
கடலூர் தவெக எம்எல்ஏ ராஜ்குமார் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:29 am IST
திருவாடானை தவெக எம்எல்ஏவாக இருக்கும் ராஜீவ் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
May 21, 2026, 10:26 am IST
கும்பகோணம் தவெக எம்எல்ஏ வினோத் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
May 21, 2026, 10:21 am IST
காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித் குமார் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
May 21, 2026, 10:20 am IST
காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித் குமார் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
May 21, 2026, 10:18 am IST
குமாரபாளையம் தவெக எம்எல்ஏ சி விஜயலட்சுமி அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:13 am IST
அவிநாசி எம்எல்ஏ கமலி அமைச்சரானார்
அவிநாசி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ கமலி அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
May 21, 2026, 10:11 am IST
தூத்துக்குடி எம்எல்ஏவும், நடிகருமான ஸ்ரீநாத் அமைச்சராக பதவியேற்றார்.
May 21, 2026, 10:09 am IST
தேசியகீதத்தை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது
May 21, 2026, 10:09 am IST
வந்தே மாதரம் பாடலை தொடர்ந்து தேசியகீதம் பாடப்பட்டு வருகிறது.
May 21, 2026, 10:05 am IST
அமைச்சரவை பதவியேற்பு விழா வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது
READ MORE
8:48 AM, 21 May
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தவெகவை சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு என தகவல்.
8:49 AM, 21 May
அமைச்சர்களாக பதவியேற்கும் எம்எல்ஏக்களுக்கு இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
8:50 AM, 21 May
விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இன்று இடம்பெறுகிறது.
8:52 AM, 21 May
தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும்படி தவெகவிற்கு ஆதரவளித்துள்ள விசிகவிற்கு முதல்வர் விஜய் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசிகவிற்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விசிக எம்எல்ஏ இன்று அமைச்சராக பதவியேற்காமல் அடுத்தகட்ட விரிவாக்கத்தில் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தவகல் வெளியாகி உள்ளது.
8:55 AM, 21 May
தமிழக அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். வாணியம்பாடி தொகுதியில் சையத் பாரூக் பாஷாவும், பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் வென்று எம்எல்ஏக்களாக உள்ளனர். இவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது பற்றி இன்று காலை 11 மணிக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இதனால் இன்றைய அமைச்சரவை பதவியேற்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கவில்லை என கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் உறுதி செய்துள்ளார்.
9:27 AM, 21 May
ஸ்ரீநாத் – தூத்துக்குடி எம்எல்ஏ
கமலி – அவிநாசி எம்எல்ஏ
சி விஜயலட்சுமி – குமாரபாளையம் எம்எல்ஏ
ரஞ்சித் குமார் – காஞ்சிபுரம் எம்எல்ஏ
வினோத் – கும்பகோணம் எம்எல்ஏ
ராஜீவ் – திருவாடானை எம்எல்ஏ
ராஜ் குமார் – கடலூர் எம்எல்ஏ
காந்திராஜ் – அரக்கோணம் எம்எல்ஏ
மதன் ராஜா – ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ
ஜெகதீஷ்வரி – ராஜபாளையம் எம்எல்ஏ
ராஜேஷ் குமார் – கிள்ளியூர் எம்எல்ஏ (காங்கிரஸ்)
விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு எம்எல்ஏ
லோகேஷ் தமிழ் செல்வன் – ராசிபுரம் எம்எல்ஏ
விஜய் தமிழன் பார்த்திபன் – சேலம் தெற்கு எம்எல்ஏ
ரமேஷ் – ஸ்ரீரங்கம் எம்எல்ஏ
விஸ்வநாதன் – மேலூர் எம்எல்ஏ (காங்கிரஸ்)
குமார் – வேளச்சேரி எம்எல்ஏ
தென்னரசு – ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ
சம்பத்குமார் – கோவை வடக்கு எம்எல்ஏ
முகமது பர்வாஸ் – அறந்தாங்கி எம்எல்ஏ
சரத்குமார் – தாம்பரம் எம்எல்ஏ
மரிய வில்சன் – ஆர்கே நகர் எம்எல்ஏ
விக்னேஷ் – கிணத்துக்கடவு எம்எல்ஏ
என மொத்தம் 23 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதில் 21 பேர் தவெகவை சேர்ந்தவர்கள். 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
9:29 AM, 21 May
தமிழக அமைச்சர்களாக இன்று பதவியேற்கும் தவெகவின் 21 எம்எல்ஏக்கள், 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu Chief Minister has recommended to induct the following 23 MLAs in the Council of Ministers. The Tamil Nadu Governor has approved the recommendation made by the Chief Minister to appoint them as Ministers. pic.twitter.com/LyLPrYJCGp
இன்று புதிதாக அமைச்சர்களாகும் 23 எம்எல்ஏக்களில் 7 பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். இதில் தவெகவில் 6 பேரும், காங்கிரஸ் கட்சியில் ஒருவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
9:41 AM, 21 May
தவெகவில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் ரமேஷ் வெற்றி பெற்றார். இவர் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஏற்கனவே மயிலாப்பூர் தொகுதியில் வெங்கடரமணன் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரமேஷும் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். தவெகவில் இவர்கள் 2 பேரும் பிராமண வேட்பாளர்களாக களமிறங்கி வென்ற நிலையில் முதல்வர் விஜய் அமைச்சர் பதவி வழங்கி உள்ளார்.
9:45 AM, 21 May
சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி உள்பட 25 எம்எல்ஏக்களில் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
9:45 AM, 21 May
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவையொட்டி சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய். இன்று காலை 10 மணிக்கு 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
9:49 AM, 21 May
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவையொட்டி சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய். இன்று காலை 10 மணிக்கு 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். விசிகவிற்கு தவெக அமைச்சரவையில் ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விசிக சார்பில் இன்று பதவியேற்கவில்லை.
10:04 AM, 21 May
அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் முதல்வர் விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார்.
10:05 AM, 21 May
அமைச்சரவை பதவியேற்பு விழா வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது
10:09 AM, 21 May
வந்தே மாதரம் பாடலை தொடர்ந்து தேசியகீதம் பாடப்பட்டு வருகிறது.
10:09 AM, 21 May
தேசியகீதத்தை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது
10:11 AM, 21 May
தூத்துக்குடி எம்எல்ஏவும், நடிகருமான ஸ்ரீநாத் அமைச்சராக பதவியேற்றார்.
10:13 AM, 21 May
அவிநாசி எம்எல்ஏ கமலி அமைச்சரானார்
அவிநாசி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ கமலி அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
10:18 AM, 21 May
குமாரபாளையம் தவெக எம்எல்ஏ சி விஜயலட்சுமி அமைச்சராக பதவியேற்றார்.
10:20 AM, 21 May
காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித் குமார் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
10:21 AM, 21 May
காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித் குமார் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
10:26 AM, 21 May
கும்பகோணம் தவெக எம்எல்ஏ வினோத் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
10:29 AM, 21 May
திருவாடானை தவெக எம்எல்ஏவாக இருக்கும் ராஜீவ் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
10:31 AM, 21 May
கடலூர் தவெக எம்எல்ஏ ராஜ்குமார் அமைச்சராக பதவியேற்றார்.
10:32 AM, 21 May
அரக்கோணம் எம்எல்ஏ காந்திராஜ் அமைச்சராக பதவியேற்றார்.
10:35 AM, 21 May
ஒட்டபிடாரம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ மதன் ராஜா அமைச்சராக பதவியேற்றார்.
10:37 AM, 21 May
ராஜபாளையம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ ஜெகதீஷ்வரி அமைச்சராக பதவியேற்றார்.
10:40 AM, 21 May
கிள்ளியூர் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பின்போது முடிவில் காமராஜர் நாமம் வாழ்க, ராகுல் காந்தி வாழ்க என கூறினார். அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘இது உங்களின் உறுதிமொழியின் ஒரு பகுதியாக இல்லை’’ என சிரித்தபடி கூறினார்.
10:42 AM, 21 May
ஈரோடு கிழக்கு தொகுதியின் தவெக எம்எல்ஏ விஜய் பாலாஜி அமைச்சராக பதவியேற்றார்.
10:46 AM, 21 May
ராசிபுரம் தவெக எம்எல்ஏ லோகேஷ் தமிழ் செல்வன் அமைச்சராக பதவியேற்றார். இவர் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் ஆவார்.
Tamil Nadu Cabinet Expansion (தமிழக அமைச்சரவை விரிவாக்கம்) LIVE News in Tamil: Stay updated with the latest news on Tamil Nadu Chief Minister C. Joseph Vijay's cabinet expansion (தவெக அமைச்சரவை விரிவாக்கம்) today. Get live updates, new minister appointments, and key political developments in Tamil Nadu at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.