கலாநிதிமாறன் மூலம் கருணாநிதி குடும்பத்து சம்பந்தியாகும் நடிகர் விக்ரம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுக்கு தமது மகளை திருமணம் செய்து கொடுத்து அந்த குடும்பத்து சம்பந்தியாகிறார் நடிகர் விக்ரம். இந்த சம்பந்த ஏற்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தது சன் குழும தலைவர் கலாநிதி மாறன்தானாம்..
கெவின் கேர் நிறுவனர் தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் ஜூலை 10-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
கெவின் கேர் ரங்கநாதன் திருமணம் செய்திருப்பது யாரை எனில், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் மகள் தேன்மொழியைத்தான்... இவர்களது மகன்தான் மனு ரஞ்சித்.

அதாவது நடிகர் விக்ரம் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது கருணாநிதியின் கொள்ளுப் பேரனுக்கு...
இதில் கலாநிதி மாறன் எங்கே வருகிறார்? என்ற கேள்வி வருகிறதா?
சன் குழும தலைவர் கலாநிதி மாறனுக்கு மிகமிக நெருக்கமானவர்களில் தினகரன் பதிப்பாசிரியர் ஆர்.எம்.ஆர். மற்றும் நடிகர் விக்ரமும் அடங்குவர். ஆர்.எம்.ஆர், நடிகர் விக்ரம் இருவரும் கலாநிதி மாறனைவிட ஒரு ஆண்டு லயோலா கல்லூரி சீனியர்ஸ்.
கல்லூரி கால நட்பை இன்று வரை இவர்கள் தொடர்ந்து பேணி வருகின்றனர். இப்போது கலாநிதி மாறனின் குடும்பத்துக்குள் நடிகர் விக்ரம் சம்பந்தியாகி இருக்கிறார்.

இதில் சுவாரசியம் என்னவெனில் மனு ரஞ்சித்தும் அக்ஷிதாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பச்சைகொடி காட்டி திருமணத்தை இருவீட்டார் சம்மதத்துடன் நடத்துவதில் விக்ரமின் நண்பரான கலாநிதி மாறன் பங்கு நிச்சயம் இல்லாமல் இல்லை என்கின்றனர் இருதரப்பினரும்..
ஆக.. இனி கருணாநிதி குடும்பத்தில் கலாநிதியின் நண்பரான நடிகர் விக்ரமும் "சம்பந்தி" என ஒரு அங்கமாகிறார்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications