காங்கிரஸின் கோட்டை விளவங்கோடு! விஜயதரணிக்கு "கை" கொடுக்குமா? எம்எல்ஏ ஆவது யார்? தந்தி சர்வே!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சியா, பாஜகவா யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து தந்தி டிவி கருத்து கணிப்புகளில் தெரிந்து கொள்ளலாம். இரு கட்சிகளுக்கும் டஃப் ஃபைட் இருப்பது போல் தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி வருகிறது.

இந்த நிலையில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் வருகின்றன. தேர்தல் முடிந்ததும் ஒரு சில நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிடும். அந்த வகையில் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட தந்தி டிவியின் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதில் ஒவ்வொரு தொகுதியாக கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தொகுதியில் திமுக- அதிமுக நேரடியாக மோதவில்லை. மாறாக அதன் கூட்டணி கட்சிகள் களம் காண்கின்றன. அதில் காங்கிரஸ் சார்பில் பிரவீன், பாஜக சார்பில் விஜயதரணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஸ்டெல்லா, தவெக சார்பில் மைக்கேல் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
விஜயதரணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது 3 முறை அந்த தொகுதியில் வென்றிருக்கிறார். தற்போது பாஜக சார்பில் களம் காண்கிறார். தந்தி டிவியின் கருத்து கணிப்புகளின்படி காங்கிரஸ் கட்சிக்கு 38 சதவீதம் முதல் 44 சதவீதம் வரையும் பாஜகவுக்கு 36 சதவீதம் முதல் 42 சதவீதமும் தவெகவுக்கு 12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையும், நாம் தமிழர் கட்சிக்கு 1 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையும் வாக்குகள் கிடைக்கும் என கணிப்புகள் சொல்கின்றன.
இதனால் இங்கு கணிக்க முடியாத அளவுக்கு கடும் போட்டி நிலவும். விளவங்கோட்டில் பாஜகவுக்கு வாக்குகள் இருந்தாலும் விஜயதரணி எவ்வளவு வாக்குகளை பெறுகிறார் என்பதை பார்க்க வேண்டும். இந்த கடும் போட்டியை பார்க்கும் போது காங்கிரஸின் எஃகு கோட்டையில் இருந்து பாஜகவுக்கு வாக்குகளை விஜயதரணி குவித்துள்ளார் என்றே தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி மீதான விமர்சனங்கள் விளவங்கோட்டில் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது. அது போல் விளவங்கோட்டில் காங்கிரஸுக்கு வாக்கு சதவீதம் இருக்கிறது. அதை உடைக்கும் சக்தி விஜயதரணியிடம் இருக்கிறது. எனவே காங்கிரஸ் ஏற்கெனவே இருந்த பலத்துடன் மேலும் வலுபெறுமா இல்லை அந்த வாக்குகளை உடைத்து விஜயதரணி தனது பலத்தை நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications