முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை கண்டித்து லட்சுமிபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்
ராட்சத கிணறு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை கண்டித்து கிராம மக்கள் லட்சுமிபுரத்தில் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்ஸைக் கண்டித்து கிராம மக்கள் இன்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு மிகப் பெரிய ராட்சத கிணறுகள் 2 உள்ளன.
இதனால் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. ஊராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவியது.

மக்கள் போராட்டம்
ஒபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சர்ச்சைக்குரிய கிணற்றை தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிணற்றை ஒப்படைக்கவில்லை
ஆனால் அதற்கான எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. மேலும், கிணற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் ஓபிஎஸ் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் போராட்டம்
இந்நிலையில், கடந்த 3 தினங்களாகக் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். 7ம் தேதியான நேற்று குத்து விளக்கேற்றி போராட்டம் நடத்தினர்.

கறுப்புக் கொடி போராட்டம்
இன்று காலை கிராமத்தில் உள்ள வீடுகள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து லட்சுமிபுரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மக்களை அவமதிக்கும் ஓபிஎஸ்
முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், தனது சொந்த ஊர் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் சென்னையிலேயே இருந்து கொண்டு மக்களை அவமதிப்பதாகக் கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து கிணற்றை பொது மக்களிடம் உடனடியாக ஓபிஎஸ் ஒப்படைக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications