சிறுமி வாயில் துணி வைத்து.. கடத்த முயன்ற வடமாநில இளைஞர்! கள்ளக்குறிச்சியில் தர்ம அடி கொடுத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சுந்தரேசபுரம் கிராமத்தில் வடமாநில நபர் ஒருவர் சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கடத்த முயன்ற போது அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

அண்மை காலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுமிகள் காணாமல் போவது வழக்கமாகி வருகிறது. ஏற்கனவே செஞ்சியில் காணாமல் போன 7 வயது சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் சுமார் 35 நாட்களுக்கும் மேலாக போலீசார் மற்றும் சிபிசிஐடி தரப்பு திணறி கொண்டிருக்கிறது. இது தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Child kidnap

அதேபோல் சிறுமிகள் காணாமல் போவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் வடமாநில நபர் ஒருவர் சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெகதீசன் - சுகன்யா தம்பதி. இவர்களின் மகள் சாலை ஓரத்தில் விளையாடி கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென சிறுமியின் அருகில் வந்த ஒரு நபர் வாயில் துணியை வைத்து தூக்கி செல்ல முயற்சி செய்திருக்கிறார். அப்போது அக்கம் பக்கத்தினர் பார்த்து வட மாநில நபரை விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக ஹிந்தி மொழியில் பேசி இருக்கிறார். இதனால் அங்கிருந்தவர்கள் பயந்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் உட்பட ஊர்மக்கள் ஒன்று கூடி வட மாநில நபரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின் காவல்துறையினர் அந்த வடமாநில நபரை அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+