அடிக்கிறார், உளறுகிறார், தேர்தல் தேதி தெரியலை.. விஜயகாந்த்தை கிண்டலடிக்கும் பொன்னம்பலம்
கடலூர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜிஆர் என்று கூறிக் கொள்கிறார். ஆனால் யாரைப் பார்த்தாலும் அடிக்கிறார், உளறுகிறார். தேர்தல் தேதி கூட அவருக்குத் தெரியவில்லை என்று வில்லன் கம் சிரிப்பு நடிகர் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து பண்ருட்டி அருகே சிறுவத்தூர், காடாம்புலியூர் ஆகிய பகுதிகளில் பொன்னம்பலம் பிரசாரம் செய்தார்.
அவர் பேசும்போது, கறுப்பு எம்ஜிஆர் என சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த் தற்போது அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். அவர் எங்கு சென்றாலும் வேட்பாளரை அடிப்பது, தேர்தல் தேதி தெரியாமல் மற்றவர்களிடம் கேட்பது என உளற ஆரம்பித்து விட்டார்.

எனவே அவருடன் நிற்க வேட்பாளர் யாரும் முன்வருவதில்லை. குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல அவரது கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் ஒருவர் ஒருவராக அதிமுகவுக்கு வருகின்றனர் என்றார் அவர்.
ஆனஸ்ட் ராஜில் விஜயகாந்த்துடன் சண்டை போட்டவர்
பொன்னம்பலம் விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்தவர் ஆவார். குறிப்பாக ஆனஸ்ட் ராஜ் படத்தில் இவரும், விஜயகாந்த்தும் இடம் பெற்ற சண்டைக் காட்சிகள் பிரபலம்.
பொன்னம்பலம் மிக்ச சிறந்த லெக் பைட்டர் என்று விஜயகாந்த்தை பலமுறை பாராட்டியுள்ளார். ஆனஸ்ட்ராஜ் படத்திற்குப் பிறகுதான் பொன்னம்பலமும் பெரிய வில்லன் நடிகராக, சண்டை நடிகராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications