அம்மை, அப்பனுக்கே அறிவுரை வழங்கிய 6 வயது சிறுமி: வீடியோவை பாருங்களேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவாகரத்தான பெற்றோரை பிரச்சனைகளை மறந்து நல்ல நண்பர்களாக இருக்குமாறு ஆறு வயது சிறுமி அறிவரை வழங்கிய வீடியோ இணையதளத்தில் மிகவும் பிரபலம் ஆகி உள்ளது.

டியானா என்ற 6 வயது குழந்தை விவாகரத்தான தனது பெற்றோருக்கு பெரிய மனுஷி போன்று அறிவுரை வழங்கியுள்ளது. இதை டியானாவின் தாய் வீடியோ எடுத்துள்ளார். யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

வீடியோவில் டியானா கூறியிருப்பதாவது,

அம்மா, நீங்களும் தந்தையும் பிரச்சனையை எல்லாம் மறந்துவிட்டு நண்பர்களாக இருக்க வேண்டும். நீங்கள் மட்டும் அல்ல உலக மக்கள் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும். அது தான் நல்லது. நான் இனிமையானவளாக இருக்க முடியும் என்றால் அனைவராலும் அப்படி இருக்க முடியும் என நம்புகிறேன்.

அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் யாரையாவது பார்த்தால் அவர்கள் முகத்தில் புன்னகையை பார்க்க விரும்புகிறேன். மனிதர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளாவிட்டால் வருங்காலத்தில் உலகில் மனிதர்களே இருக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+