ஜெ.உடலை சுற்றி மன்னார்குடி குடும்பம்.. யார் யார் விவரம்!
சென்னை: மறைந்த ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது அவரது உடலை சுற்றி சசிகலா உறவினர்கள் யார் யார் நின்றுகொண்டிருந்தனர் என்பதை விளக்கும் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

பின்னர் ஜெயலலிதா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. ஜெயலலிதா உடலை சுற்றி அவரது நெருங்கிய தோழி சசிகலா இருந்தார். அவருக்கு உட்கார நாற்காலி போடப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான நேரம் சசிகலா எழுந்து நின்று, ஜெயலலிதாவின் முகத்தை துடைத்தபடியே இருந்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே ஜெயலலிதா உடல் அருகே ஓரமாக நின்று கொண்டிருந்தனர். மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் படிக்கட்டுகளில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தனர்.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை மீடியாவில் காட்டக் கூடாது, என்பதற்காக சசிகலா உறவினர்கள் ஜெயலலிதாவின் உடலை சுற்றி அரணாக நின்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் உடலை சுற்றி நின்று கொண்டிருந்தனர். இவர்களை பற்றிய விவரங்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.
அதில் சசிகலாவைத் தவிர பலர் ஜெயலலிதாவால், கடந்த 2011 -ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த போது துரோகிகள் என அறிவிக்கப்பட்டு அதிமுகவில் இருந்து வெளியேற்றபட்டவர்கள். இவர்கள் யார் யார் என்பதை விளக்கும் படம் விளக்குகிறது. நக்கீரன் வெளியிட்டுள்ள இந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜெ.,உடலை சுற்றி நின்ற மன்னார்குடி குடும்பம்.. யார் யார் பட்டியல்
திவாகரன் (சசிகலா தம்பி), மகாதேவன் (சசிகலா அண்ணன் மகன்)
நடராஜன் (சசிகலா கணவர்), டாக்டர் சிவக்குமார் (சசி அண்ணன் மருகன்)
பாஸ்கர் (சசிகலா அக்கா மகன்), மதன் (இளவரசி அண்ணன் வடுகநாதனின் மகன்)
விக்ரம் (திவாகரன் மருமகன்), பிரியா (இளவரசி மகள்), விக்ரம் (திவாகரன் மருமகன்)
ஜெய்ஆனந்த் (சசிகலா தம்பி திவாகரன் மகன்), வெங்கடேசன் (சசிகலா அண்ணன் மகன்), தினகரன் (சசிகலா அக்கா மகன்)
பண்ணைவயல் பாஸ்கர் (டாக்டர் வெங்கடேஷ் மாமனார்) , விவேக் (இளவரசி மகன்) இளவரசி ராஜராஜன் (இளவரசி மருமகன்)
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications