விஜயகாந்த் மகன் படுதோல்வி.. விருதுநகரில் விஜயபிரபாகரனை வீழ்த்தி தவெக வேட்பாளர் அமோக வெற்றி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்ட நிலையில் அவர் படுதோல்வியடைந்தார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் அமோக வெற்றி பெற்ற நிலையில் விஜயபிரபாகரன் 2ம் இடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் சட்டசபை தொகுதியில் களமிறங்கினார். இதுதான் அவரது முதல் சட்டசபை தேர்தலாகும். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நிச்சயமாக விஜயபிரபாகரன் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வார்? என்று எதிர்பார்க்கப்பட்டது.

virudhunagar-election-results-2026-is-vijayakanth-son-vijaya-prabhakaran-will-win-in-virudhunagar

இந்த தொகுதியில் அதிமுகவில் விஜி கணேசன் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சியில் லட்சுமணன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ்பி செல்வம் களமிறங்கினார்.

கடந்த மாதம் 23ம் தேதி நடந்த தேர்தலில் விருதுநகர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 82.77 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதன்படி 79,369 ஆண்களும், 86,654 பெண்களும், 24 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களித்தனர். மொத்தமாக 1 லட்சத்து 66 ஆயிரத்து 47 ஆயிரம் வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தார். அதிமுகவில் விஜி கணேசன் பின்னடைவை சந்தித்தார்.

அதன்பிறகு தான் தவெக வேட்பாளர் எழுச்சி பெற்றார். விஜயபிரபாகரன் பின்னடைவை சந்தித்தார். அடுத்தடுத்து சுற்றுகளில் அவரால் முன்னேற முடியவில்லை. இறுதியில் தவெக வேட்பாளர் செல்வம் 63,653 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். விஜய பிரபாகரன் 54,262 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.

விஜய பிரபாகரன் 9391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செல்வத்திடம் தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் கணேசன் 34,212 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் லட்சுமணன் 10,120 ஓட்டுகள் வாங்கி 4ம் இடம் பிடித்தார்.

இந்த தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டில் தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சர் மாபோ பாண்டியராஜன் வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் திமுகவின் ஏஆர்ஆர் சீனிவாசன் வெற்றி பெற்றிருந்தார். இது விஜயபிரபாகரனுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.

மேலும் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் 3,80,877 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். திமுக கூட்டணியில் களமிறங்கிய மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் வாங்கி 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் முந்தைய அனுபவம் விஜயபிரபாகரனுக்கு கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோற்றுப்போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+