நல்ல மதிப்பெண் எடுத்தும் படிக்க முடியாத மாணவரா... இந்தாங்க விஷால் நம்பர்!
சென்னை: நல்ல மதிப்பெண்கள் இருந்தும் வசதி இல்லாததால் மேற்படிப்பைத் தொடர முடியாத மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஷால் உதவி செய்ய முன்வந்துள்ளார்.
முதல்கட்டமாக 16 ஏழை மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர அவர் பண உதவி அறிவித்துள்ளார்.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சசிகுமார், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்கள்.
சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில நடிகர்கள் நலிவடைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஷால், தற்போது வெளிவந்துள்ள பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், பணம் இல்லாத சூழ்நிலையில் நல்ல கல்லூரியில் சேர முடியாத மாணவ, மாணவிகளுக்கு பணஉதவி செய்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.
விஷால் தனது அம்மா பெயரில் தொடங்கியுள்ள தேவி அறக்கட்டளை மூலமாக இந்த உதவியை செய்யவுள்ளார். யாராவது தங்கள் பகுதிகளில் இதுபோன்று மேல்படிப்புக்கு கஷ்டப்படும் மாணவர்கள் பற்றிய விவரங்களை விஷாலுக்கு தெரியப்படுத்தினால், அவர் அந்த மாணவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவுவார். மேலும், விவரங்கள் அறிந்துகொள்ள 8754009846 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசலாம்.

விஷால் தற்போது மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற 16 மாணவ, மாணவிகளின் படிப்புக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.
அந்த மாணவர்கள் விவரம்:
பத்மபிரியா 1137/1200
புவனேஸ்வரி 1128/1200
சக்தி 1082/1200
கோபிநாத் 1068/1200
பிரகதி 1044/1200
கங்காதேவி 1039/1200
ரியாஸ் அகமது 1027/1200
மனிஷா 1016/1200
மனோ 1010/1200
ஏ.பிரியா 966/1200
எஸ்.பிரியா 923/1200
உமா மகேஷ் 994/1200
பூவிழி கண்ணை 956/1200
மாரிமுத்து 971/1200
நவீன்குமார் 979/1200
அமரா 951/1200.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications