அரசியலில் குதித்தார் விஷால்... ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.சுயேட்சை வேட்பாளராக விஷால் களமிறங்குகிறார். இதன் மூலம் விஷால் அதிகாரப்பூர்வமாக அரசியலில் குதித்துவிட்டார்.
ஜெ. மறைவால் காலியான ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி, இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன் களமிறங்குகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.
இதுதவிர சுயேட்சையாக தினகரன் போட்டியிட உள்ளார். நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

திங்கள்கிழமை வேட்புமனு
இதனிடையே, திடீர் வரவாக தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

மக்களுக்கு என்ன செய்தார்
அரசியலில் குதித்துள்ள, விஷால் இதுவரை தமிழக மக்களுக்காக என்ன செய்தார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை சந்தித்து பேசியது மட்டுமே அரசியலில் குதிக்க தகுதியுடையதாகிவிடுமா என்று கேட்கிறார்கள் மக்கள்.

அரசியல், சினிமா அஸ்தமனம்
விஷாலுக்கு அரசியல் வாழ்வு மட்டுமல்ல, திரைப்பட வாழ்வும் அஸ்தமிக்கப்போகிறது என்று கூறியுள்ளார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. எம்ஜிஆர், ஜெயலலிதா போல திரையுலகில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்று அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்பே சொன்ன ஒன்இந்தியாதமிழ்
சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்றும், யாரை வீழ்த்த விஷால் போட்டியிட களமிறங்கியுள்ளார் என்றும் இயக்குநர் அமீர் கேள்விகளை எழுப்பியுள்ளார். விஷால் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக 'ஒன்இந்தியாதமிழ்' செய்தி வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
வடசென்னை சிங்கம் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி இரட்டை இலை சின்னத்தில் போட்டி? எடப்பாடி பிளான்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
120 வாக்குறுதிகள்.. லிஸ்ட் போட்ட டிடிவி தினகரன்.. விட்டதை பிடிக்க அமமுக ஸ்கெட்ச் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications