அட்வைஸ் தருவதை விட்டுட்டு தயாரிப்பாளர்களுக்கு உதவுங்க.. நடிகர்களுக்கு ஜெயக்குமார் பொளேர்!
அரசுக்கு இலவச ஆலோசனை தருவதற்குப் பதிலாக, நடிகர்கள் நிதி திரட்டி சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யலாமே என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாராவது வந்தீங்க அப்புறம் நடக்கிறதே வேற என்கிற தொணியில் ஒரு விரலை உயர்த்தி பேசிய விஷாலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார்.
கந்து வட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை தமிழ் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அன்பு செழியன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அன்புசெழியனின் மிரட்டலுக்குப் பயந்து சொத்துக்களை எழுதிக்கொடுத்துள்ளனர்.
இதனிடையே நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால், திரைப்பட உலகில் இதுதான் கடைசி மரணமாக இருக்கும். இந்த மாதம் வட்டி கட்ட முடியவில்லையென்றால் எங்கேயும் ஓட மாட்டோம். தயாரிப்பாளர் சங்கத் தலைவராகச் சொல்கிறேன்... கந்து வட்டிக்குக் கொடுத்து விட்டு மிரட்டினால் இனி சும்மா இருக்க மாட்டோம் என்றார்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் அன்புச்செழியனுக்கு ஆதரவாக வரக்கூடாது என்று கூறினார். அப்படி யாராவது வந்தா அப்புறம் நடக்கிறதே வேற என்று ஒரு விரலை காட்டி வசனம் பேசினார். இதுவரை அன்புச் செழியன் கைது செய்யப்படமால் இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்றும் கூறினார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஷால் ஆதாரம் இல்லாமல் அமைச்சர்கள் மீது புழுதிவாரி தூற்றக்கூடாது என்று கூறினார். அமைச்சர்கள் யாரும் அன்புச்செழியனுக்கு ஆதரவில்லை.
நடிகர்கள் அனைவரும் நிதி திரட்டி சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யலாம். அதை விட்டு விட்டு அமைச்சர்களை ஆதரமில்லாமல் பேசக்கூடாது. பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்குத்தான் அடிதடி, மிரட்டல் எல்லாம் கை வந்த கலை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications