ஆர்கே நகரில் போட்டியிட விஷால் என்ன சின்னம் கேட்டிருக்கார் தெரியுமா?
ஆர்க நகரில் போட்டியிட நடிகர் விஷால் விசில் சின்னம் கேட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் விசில் சின்னம் கேட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனுத்தாக்கல் செய்தனர்.

நினைவிடங்களில் மரியாதை
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலும் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் வீடு சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் விஷால் மரியாதை செலுத்தினார்.

பைக்கில் சென்ற விஷால்
இதைத்தொடர்ந்து ஆர் கே நகர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய விஷால் ஆர்கே நகருக்கு பைக்கில் சென்றார்.

விசில் சின்னம் வேண்டும்
இந்நிலையில் தனது வேட்பு மனுவில் விஷால் விசில் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி இல்லாத பட்சத்தில் கேரம்போர்டு அல்லது படகு சின்னம் ஒதுக்குமாறு விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினகரனும் கேட்டுள்ளார்
சுயேட்சையாக போட்டியிடும் டிடிவிதினகரன் தொப்பி சின்னம் கேட்டுள்ளார். அப்படி தொப்பி சின்னம் இல்லாவிட்டால் விசில், கிரிக்கெட் பெட் தர தினகரன் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications