விஷாலுக்கு அரசியல் ஆரம்பமே அடி சறுக்குதே... ஜாதகம் எப்படியிருக்கு?

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த விஷால், ஜாதகப்படி அவர் அரசியலில் ஜொலிப்பாரா? இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஷாலுக்கு அரசியல் ஆரம்பமே அடி சறுக்குதே...ஜாதகம் எப்படியிருக்கு?- வீடியோ

    சென்னை: நடிகர் விஷாலுக்கு அரசியலில் ஆரம்பமே அடி சறுக்கியுள்ளது.அவரது ஜாதகம் என்ன சொல்கிறது. தசாபுத்தி, சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

    நடிகர் விஷால் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி 1977ஆம் சென்னையில் பிறந்துள்ளார்.
    அவர் சதயம் நட்சத்திரம், கும்பராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ளதாக ஜாதகம் சொல்கிறது.
    கடின உழைப்பு, சுயமுயற்சி.

    கடின உழைப்பு, சுயமுயற்சி.

    கடின உழைப்பு, சுயமுயற்சி.

    சதய நட்சத்திரம் ராகு திசை 1980 வரை நடைபெற்றது. குரு திசை 1996 ஆம் ஆண்டுவரை குரு திசை நடைபெற்றது. சனி திசை 1996 முதல் 2015 வரை சனிதிசை நடைபெற்றது. புதன் திசை 2015 முதல் 2032 வரை காலமாகும்.

    புத ஆதிபத்திய யோகம்

    புத ஆதிபத்திய யோகம்

    புதன்திசை தொடங்கிய உடன் தலைமை பதவிகள் தேடி வந்துள்ளது. 11ஆம் இடத்தில் சிம்மத்தில் சூரியன். சூரியனுடன் புதன் புத ஆதிபத்திய யோகம். அரசியலில் நல்ல நிலை தரும் நிலையாகும். மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்ந்துள்ளார்.

    சிம்ம சூரியன் தரும் வெற்றி

    சிம்ம சூரியன் தரும் வெற்றி

    சிம்மத்தில் சூரியன் அமர்ந்தால் அரசனைப் போல வாழ்வான். ஆளுமை திறன் மிக்கவர். அரசியல் ஈடுபாடு அதிகம் இருக்கும். தலைமை பதவிகள் தானாக தேடி வரும். மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்வது சிறப்பானது. விஷாலுக்கு சூரியன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

    தொழிலில் வெற்றி

    தொழிலில் வெற்றி

    லக்னாதிபதி சுக்கிரன் 10ஆம் இடத்தில அமர்ந்துள்ளார். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனியும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். எனவேதான் கலைத்துறையில் நடிகராக வெற்றி பெற்றுள்ளார் விஷால். தொழில்காரகன் சனி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இது இவருக்கு பதவியை பெற்றுக்கொடுத்துள்ளது.

    குரு செவ்வாய் சேர்க்கை

    குரு செவ்வாய் சேர்க்கை


    9ஆம் இடத்தில் குரு உடன் செவ்வாய் சேர்ந்து அமர்ந்துள்ளார். இரு குரு மங்கள யோகம்
    விஷாலுக்கு இப்போது புதன்திசை நடக்கிறது. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகளும் நன்றாகவே இருக்கின்றன.

    கால சர்ப்பம்

    கால சர்ப்பம்

    விஷாலின் ஜாதகப்படி அவருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது. இது யோகமாக மாறிய நிலையிலும் திருமண தடைக்கு காரணமாகவே உள்ளது.

    தடைகளை தாண்ட வேண்டும்

    தடைகளை தாண்ட வேண்டும்

    ராசிக்கு 9வது இடத்தில் உள்ள குரு 5ஆம் பார்வையாக ராசியை பார்க்கிறார். 11வது இடத்தில் உள்ள சனி தனது 3வது பார்வையாக ராசியை பார்க்கிறார். இந்த குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களையே கொடுக்கும். இத்தனை நல்ல அம்சங்கள் இருந்து ஆரம்ப சறுக்கல், அடுத்த வெற்றிக்கு முதல்படிதான் என்கின்றனர் ஜோதிடர்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+