நடிகர் விஷாலின் அலுவலகம் தாக்கப்பட்டது.. காரும் அடித்து நொறுக்கப்பட்டது
நடிகர் விஷாலின் அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
சென்னை: நடிகர் விஷாலின் அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. அவரது அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பதட்டத்துடனேயே பொதுக்குழு நடந்தது. எதிர்பார்த்தது போல கலாட்டாவும் நடந்தது. போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி அமளியை அடக்கினர். 5 பேர் காயமடைந்தனர். 230 பேர் கைதும் செய்யப்பட்டனர்.

இந்த கலாட்டாவின்போது நடிகர் கருணாஸின் காரை சிலர் அடித்து நொறுக்கினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது.
பொதுக்குழுக் கூட்டம் முடிந்த நிலையில் நடிகர் விஷாலின் அலுவலகம் திடீரென தாக்குதலுக்குள்ளானது. விஷாலின் அலுவலகம் வடபழனியில் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு வந்த சில மர்ம நபர்கள் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விஷாலின் சொகுசுக் காரையும் அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்கியது யார் என்பது குறித்து தெரியவில்லை.
இதுகுறித்து விஷாலின் மேனேஜர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் சரத்குமார் தரப்புதான் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications