நடிகர் சங்கத் தேர்தல்: அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் வென்றது விஷாலின் பாண்டவர் அணி!
சென்னை: பெரும் பரபரப்புக்கிடையே நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளிலும் வென்று சாதனைப் படைத்தது விஷாலின் பாண்டவர் அணி.
இந்தத் தேர்தலில் ஏற்கெனவே பலஆண்டுகள் நடிகர் சங்கப் பொறுப்புகளில் இருந்த சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீண்டும் போட்டியிட்டனர்.
ஆனால் மாற்றம் வேண்டும் என்று முழக்கமிட்ட விஷால் அணி, அனைத்துப் பொறுப்புகளுக்கும் புதியவர்களை நிறுத்தி கடும் போட்டியைத் தந்தது.
வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி 5 மணிவரை பரபரப்பாக நடந்தது.
6 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கினாலும், அடுத்த சில மணி நேரங்களில் முழுமையான முடிவுகள் வந்துவிட்டன.
இந்தத் தேர்தலில் விஷால் அணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளகளும் முக்கியப் பொறுப்புகளைக் கைப்பற்றினர்.

நாசர்
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், எதிரணியின் சரத்குமாரை 109 வாக்குகள் அதிகம் பெற்று தோற்கடித்தார்.

விஷால்
அடுத்த முக்கியப் பதவி பொதுச் செயலாளர். இந்தப் பொறுப்புக்கு விஷாலும் ராதாரவியும் மோதினர்.
விஷால் 307 வாக்குகள் அதிகம் பெற்று ராதாரவியைத் தோற்கடித்தார்.

கார்த்தி
பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் கார்த்தியும், சரத் அணி சார்பில் எஸ்எஸ்ஆர் கண்ணனும் போட்டியிட்டனர். இந்த மோதலில் கார்த்தி அபாரமாக 413 வாக்குகள் அதிகம் பெற்று கண்ணனைத் தோற்கடித்தார்.

சிம்பு தோல்வி
அடுத்து இரு துணைத் தலைவர் பதவிகளுக்கான வாக்குப் பதிவு. இந்த இரு பதவிகளுக்கும் விஷால் அணி சார்பில் கருணாஸும் பொன்வண்ணனும் நின்றனர். அவர்களை எதிர்த்து விஜயகுமாரும் சிம்புவும் போட்டியிட்டனர்.

தோல்வி
இதில் விஷால் அணி சார்பில் போட்டியிட்ட கருணாஸ் 1362 வாக்குகள் பெற்றார். எதிர்த்த விஜயகுமார் 1115 வாக்குகள் பெற்றுத் தோற்றார்.
பொன்வண்ணன் 1235 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்பு 1107 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதன் மூலம் நடிகர் சங்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் விஷாலின் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.
24 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலைக்குள் தெரிந்துவிடும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications