ஆர்.கே.நகரில் விஷாலுக்கே அதிக பாதிப்பு - ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள்
ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடுவது அவருக்குத்தான் பாதிப்பாக முடியும் என்று ஒன் இந்தியா வாசகர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். விஷாலுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். விஷாலுக்கு வாக்கு வங்கி எப்படியிருக்கிறது என்பதை இந்த தேர்தல் கூறிவிடும்.
ஆர்.கே.நகரில் 100 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று விஷால் கூறியுள்ளார். இதையடுத்து விஷால் போட்டியால் யாருக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம். ரிசல்ட் அப்படியே தலைகீழாக வந்துள்ளது.

திமுக, அதிமுகவிற்கு
விஷால் போட்டியால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று 9.19% பேர் அதாவது 1582 பேர் வாக்களித்துள்ளனர். அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று 13.44% பேர் அதாவது 2,313 பேர் வாக்களித்துள்ளனர்.

பாஜகவிற்கு பாதிப்பு
விஷால் போட்டியால் பாஜகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று 2.93%பேர் அதாவது 505 பேர் கருத்து கூறியுள்ளனர். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று 14.19% பேர் அதாவது 2,443 மக்கள் வாக்களித்துள்ளனர்.

விஷாலுக்கு மட்டுமே பாதிப்பு
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதால் விஷாலுக்குதான் பாதிப்பு என்று மிகப் பெரும்பான்மையோனோர் கூறியுள்ளனர். அதாவது 60.24% பேர் (10,368) வாக்களித்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல்
நடிகர் விஷாலை யாராவது பின்னால் இருந்து இயக்குகிறார்களா என்று கேட்டதற்கு தனக்கு பின்னால் யாரும் இல்லை என்றும் விஷால் கூறியுள்ளார். வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்று கூறும் விஷாலின் அரசியல் பயணம் ஆர்.கே.நகரில் இருந்து தொடங்குகிறதா? அல்லது ஆர்.கே.நகருடன் முடிவுக்கு வருமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications