இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

பிக் எஃப் எம் ரேடியோ ஜாக்கியானார் விஜய் டிவி ரம்யா

By Mayura Akilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை: பிரபலமான சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா தற்போது ரேடியோ ஜாக்கியாக களமிறங்கியுள்ளார். பிக் பிப்டி பிப்டி என்ற நிகழ்ச்சியை நேரடியாக நடத்தும் அவர் வாசகர்களுடன் உரையாடுகிறார்.

  விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா?, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் ரம்யா. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்திருந்தார்.

  திருமணத்திற்குப் பின்னர் ரம்யா சினிமாவில் நடிக்க வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் திடீரென பிக் எஃப் எம் நிகழ்ச்சியின் ரேடியோ ஜாக்கியாக களமிறங்கிவிட்டார். தினசரி மாலை 4 மணி முதல் 6 மணிவரை ரம்யா உடன் உரையாடலாம்.

  எனக்கு இது புதிய அனுபவம்... கொஞ்ச நாளைக்கு தப்பும் தவறுமாகத்தான் இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள், என்னுடன் பேசுங்கள் மகிழ்ந்திருங்கள் என்று தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார் ரம்யா.

  எத்தனையோ ரேடியோ ஜாக்கிகள், வீடியோ ஜாக்கிகளாக வலம் வருகின்றனர். டிவி சீரியல்களில் நடிக்கின்றனர். ஆனால் பிரபல வீடியோ ஜாக்கியாகவும், நடிகையாகவும், சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த ரம்யா திடீரென ரேடியோ ஜாக்கியாக மாறியதன் காரணம் என்னவென்று புரியமல் தவிக்கின்றனர் அவரது அபிமானிகள்.

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  It looks like popular VJ and television anchor Ramya has taken the plunge into RJing as well. The anchor is now an RJ at a popular radio station. The excited actress shared the post on her micro-blogging page, "VJ to RJ avatar !!Everyday 4-6pm on my show talk with me."

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more