ஜியோவுக்கு பதிலடி.. அதிரடி 4ஜி டேட்டா வழங்கும் வோடபோன் 'ரெட்'
பிஎஸ்என்எல், ஐடியா, ஜியோவின் அதிரடியைத் தொடர்ந்து வோடாபோன் அதன் பங்கிற்கு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
மும்பை: வோடபோன் நிறுவனத்தின் ரெட் போஸ்ட்பெயிட் (RED post-paid) திட்டங்களின் படி வாடிக்கையாளர்களுக்கு 3 மடங்கு டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வோடபோன் வழங்குகின்றது.
ஜியோ நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்தியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏர்டெல், பிஎஸ்என்எல், ஐடியா நிறுவனங்களும் அதன் பங்கிற்கு சலுகைகளை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வோடாபோனும் அதன் பங்கிற்கு ஒரு சூப்பர் சலுகையை களமிறக்கியுள்ளது. இத்திட்டங்களின் துவக்க விலை ரூ.499 ஆகும்.
வோடபோன் ரெட் பிளான் சலுகையில் ரூ.499 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், இலவச தேசிய ரோமிங், 100 உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ் 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 3ஜிபி டேட்டாவும், 4ஜி ஸ்மார்ட்போன் இல்லாதோருக்கு 1ஜிபி டேட்டாவும் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல் ரெட் பிளானில் ரூ.699 ன் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு 5ஜிபி டேட்டாவும் 4ஜி ஸ்மார்ட்போன் இல்லாதோருக்கு 2.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அன்லிமிட்டெட் காலிங் வசதி, மற்றும் இலவச தேசிய ரோமிங் மற்றும் 100 உள்ளூர் தேசிய எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இப்படியாக வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்கள் ரூ.999/-, ரூ.1,299/-, ரூ.1,699/- மற்றும் ரூ.1,999/- என்ற ரீசார்ஜ்களில் கிடைக்கின்றன
வோடபோன் ரெட் ரூ.1999 திட்டத்தின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 24 ஜிபி டேட்டாவும் 4ஜி டேட்டா இல்லாத வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகின்றது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தேசிய ரோமிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications