செங்கோட்டையில் உயர் அழுத்த மின்சாரத்தினால் 50-க்கும் மேற்பட்ட டிவி சேதம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் சேதமடைந்துள்ளன. பழுதான தொலைகாட்சிப் பெட்டிகளை சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Voltage problem damaged Electric appliances in Shenkottai

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடியை அடுத்துள்ளது வேம்பநல்லூர் கிராமம். இங்கு நேற்று பலத்த காற்றின் காரணமாக மின்சாரம் அடிக்கடி தடைபட்டும், உயர் அழுத்தமாகவும் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் உள்ள மின்சார பல்புகள் வெடித்தன. மின் விசிறிகள் காயில் எரிந்தும், சாதாரணது முதல் விலை உயர்ந்த தொலைக்காட்சி பெட்டிகள் அனைத்தும் சேதமாகியும் உள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் மின்சாரத்தை உபயோகப்படுத்த முடியாமல் தவித்தனர். உயர் அழுத்த மின்சாரத்தின் காரணமாக பழுதான தொலைக்காட்சிப் பெட்டிகளை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+