நாட்டில் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட ‘இரட்டை இலை’க்கு வாக்களியுங்கள்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய நாடு முழுவதும் ‘அமைதி', ‘வளம்', ‘வளர்ச்சி' ஏற்படவும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படவும்; தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிடமிருந்து கிடைத்திடவும் அதிமுகவிற்கு வாக்களித்து 40 வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றும் வாக்காளர்களுக்கு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என் அன்புக்குரிய வாக்காள பெருமக்களே. 24.4.2014 அன்று (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளன.

54 இடங்களில் பிரசாரம்

54 இடங்களில் பிரசாரம்

இந்தத் தேர்தல்களையொட்டி கடந்த 3.3.2014 முதல் 37 பொதுக்கூட்டங்களிலும், சென்னை பெருநகரில் 17 இடங்களிலும், ஆக மொத்தம் 54 இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த என்னுடைய கனவுகளையும், கவலைகளையும், திட்டங்களையும் பற்றி உங்களிடையே எடுத்துக்கூற வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

நான் செல்லும் இடமெல்லாம் வாக்காள பெருமக்களாகிய நீங்கள் வரலாறு கண்டிராத வகையில் பல லட்சக்கணக்கில் திரண்டிருந்து நல்லாதரவு வழங்கினீர்கள். உங்களுடைய உற்சாகமான பங்கேற்பு காரணமாக என்னுடைய தேர்தல் பிரசார கூட்டங்கள் எல்லோரும் கண்டு வியப்படையும் வகையில் வெற்றிகரமாக அமைந்தன. நீங்கள் காட்டிய அன்பு என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆரின் இயக்கம்

எம்.ஜி.ஆரின் இயக்கம்

தமிழக மக்களை, திராவிட இயக்கத்தின் பெயரைச் சொல்லியும், பேரறிஞர் அண்ணாவின் பெயரைச் சொல்லியும் வஞ்சித்து, அரசியலை தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்ட கருணாநிதியின் சுயநல போக்கினை கண்டு வெகுண்டெழுந்து எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார்.

உங்கள் உயர்வே முக்கியம்

உங்கள் உயர்வே முக்கியம்

தன் மீது நம்பிக்கை வைத்து அன்பு காட்டிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்லாட்சி நடத்தினார் எம்.ஜி.ஆர். அவருடைய நல்லாசியுடனும், அவருடைய வழியிலும் அரசியல் பயணத்தை தொடங்கிய நான், என்னுடைய வாழ்வை உங்களுக்காகவே முழுமையாக அர்ப்பணித்து வாழ்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு எதுவும் இல்லை. உங்கள் வளர்ச்சி தான் எனது மகிழ்ச்சி. உங்களுடைய உயர்வு தான் எனக்கு நிம்மதி.

ஏழைகளின் ஆட்சி

ஏழைகளின் ஆட்சி

எனவே தான், என்னுடைய ஆட்சிக்காலம் என்பது ஏழை, எளிய மக்களுக்காகவும், சமூக நீதி காப்பதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உயர்வுக்கும் தொண்டு செய்வதாக எப்பொழுதும் அமைகிறது.

மக்கள் நலத்திட்டங்கள்

மக்கள் நலத்திட்டங்கள்

உங்கள் அன்பு சகோதரியாகிய என்னுடைய ஆட்சியில் விலையில்லா அரிசி; மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம்; கிராமப்புற வறுமையை ஒழிக்க எண்ணற்ற பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள்; பெண்கள் அனைத்து நிலைகளிலும் சுய நம்பிக்கையோடு முன்னேறி செல்ல எண்ணற்ற சிறப்பு திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறேன்.

தரமான கல்வி

தரமான கல்வி

எனக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிப்பது, வருங்கால தலைமுறையினருக்கு தரமான கல்வி தந்திட நான் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களாகும். தமிழக மாணவ, மாணவிகள் தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வி பெற இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படாத வகையில் பல்வேறு உதவிகளும், வசதிகளும் எனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னோடி மாநிலம்

முன்னோடி மாநிலம்

லட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் விலையில்லா மடிக்கணினி வழங்கி வருவதன் மூலம் அறிவியல், தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உலகிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களை கண்டு அதை பின்பற்ற ஏனைய இந்திய மாநிலங்களும், சில வெளிநாடுகளும் முயற்சிப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அன்பும் ஆதரவும் தேவை

அன்பும் ஆதரவும் தேவை

மக்கள் நலன் காக்கும் இவைபோன்ற இன்னும் பல்வேறு முன்னோடி திட்டங்களை இந்த நாட்டிற்கு அளித்து, எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற உன்னத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் இருக்கிறது. அதை செயல்படுத்திட உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு எந்நாளும் தேவை.

துரோகம் செய்த கருணாநிதி

துரோகம் செய்த கருணாநிதி

தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சி நடத்திய தி.மு.க., தமிழ் மக்கள் கொடுத்த வாய்ப்பின் காரணமாக கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தது. ஆனால், கருணாநிதி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, தமிழர்களுக்கு எண்ணற்ற துரோகங்களையும், தீமைகளையும் தான் செய்தார்.

தமிழர்களுக்கு தலைகுனிவு

தமிழர்களுக்கு தலைகுனிவு

கருணாநிதியின் சுயநல, வஞ்சக போக்கிற்கு எடுத்துக்காட்டுகள் தான், உலக அரங்கில் தமிழர்களை தலைகுனிய செய்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டிற்கு இழைப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலும்; இலங்கையில் அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதற்கு அவர் பங்கேற்ற கூட்டணி அரசு வழங்கிய ஆயுதமும், ஆதரவும். எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும், அத்தனை வாய்ப்பையும் கருணாநிதியும், தி.மு.க.வினரும் தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது வரலாறு.

தவறான பொருளாதார கொள்கை

தவறான பொருளாதார கொள்கை

காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசலில் ஆரம்பித்து வெங்காயம் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்தது. பணவீக்கம் உயர்ந்தது. தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஊழல்,

ஊழலுக்கு முற்றுப்புள்ளி

ஊழலுக்கு முற்றுப்புள்ளி

ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் என பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழலால் விரயமானது. இதுபோன்ற கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திட வாக்காளப் பெருமக்களாகிய உங்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதிமுகவிற்கு வாக்கு

அதிமுகவிற்கு வாக்கு

வாக்காள பெருமக்களாகிய நீங்கள், இந்திய நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தும்; தமிழ்நாட்டின் சிறப்பு தேவைகளை கருத்தில் கொண்டும்; அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும் பாடுபடுகின்ற அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தின் உரிமைகள்

தமிழகத்தின் உரிமைகள்

மத்தியில் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தாலும், பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்தாலும், அவை, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ் மக்களின் தேவைகளையும் பற்றி சிறிதும் கவலைப்பட்டதில்லை. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தங்களுடைய வெளிமாநில வாக்கு வங்கிக்காகவே மவுனம் காத்த துரோக செயல்.

கருணாநிதி குடும்ப நலன்

கருணாநிதி குடும்ப நலன்

இந்த கட்சிகளின் நண்பனாக பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்த தி.மு.க. தன்னுடைய சுயநலனுக்காக தமிழர்களின் உரிமைகளை பலியிட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் எண்ணத்தில் மேலோங்கி இருப்பது தமிழர்களின் நலன் அல்ல. தன் குடும்பத்தின் நலன் மட்டுமே. இதற்கு ஒரு தீர்வு காண இந்தத் தேர்தலை வாக்காளர்களாகிய நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

அமைதி வளம் வளர்ச்சி

அமைதி வளம் வளர்ச்சி

இந்திய நாடு முழுவதும் ‘அமைதி', ‘வளம்', ‘வளர்ச்சி' ஏற்படவும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படவும்; தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஆதாரங்கள் மத்திய அரசிடமிருந்து கிடைத்திடவும்; புதிய மத்திய அரசில் அ.தி.மு.க. வலுவான முறையில் பங்கேற்பதன் அவசியத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்காள பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

இரட்டை இலைக்கு ஓட்டு

இரட்டை இலைக்கு ஓட்டு

எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து, அவர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எனதருமை வாக்காள பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இளைய தலைமுறை வாக்காளர்கள்

இளைய தலைமுறை வாக்காளர்கள்

குறிப்பாக, இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கப்போகும் இளைய தலைமுறை வாக்காளர்கள், தங்கள் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வை வலுப்பெற செய்யும் வகையில் ‘இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவின் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம்

வாக்காளப் பெருமக்களே. தமிழ்நாடு தலை நிமிரும் வகையிலும், இந்திய நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், நீங்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளான 24.4.2014 அன்று காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்திட வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+