'பவர் கட்': பண்ருட்டியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: மின்வெட்டு காரணமாக பண்ருட்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாள் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. 9 ஆயிரத்து 621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு மின் வெட்டு ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications