நோட்டா ஓட்டு போடுங்க… பட்டையை கிளப்பும் பரபரப்பு போஸ்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நோட்டுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தேர்தல் ஆணையம் ஒருபுறம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ‘நோட்டா' ஓட்டு போடுங்க என்று விழிப்புணர்வு போஸ்டர்கள் சென்னையின் முக்கிய தெருக்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில், ஒரு தொகுதியில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிப்பதற்கு, வாக்காளர்கள் ‘49 ஓ' என்ற படிவத்தை நிரப்பி கொடுத்து வந்தனர். ஆனால் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கு, வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு வழிமுறையை உருவாக்குமாறு தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

அதன்படி வாக்குப்பதிவு எந்திரத்தில், ‘யாருக்கும் வாக்கு இல்லை (நோட்டா)' என்ற புதிய பொத்தானை, தேர்தல் ஆணையம் உருவாக்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மிஜோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களில், இந்த புதிய நடைமுறை பயன்படுத்தப்பட்டது.

Vote for NOTA : posters paste in Chennai

15 லட்சம் ‘நோட்டா' ஓட்டு

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போது, 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ‘நோட்டா' வாக்கை பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மொத்தமுள்ள 11.53 கோடி வாக்காளர்களில் 1.31 சதவீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி தோல்வி நிர்ணயம்

மொத்த வாக்காளர்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இது அரசியல் கட்சிகளின், குறிப்பாக காங்கிரசின் வெற்றி-தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே ‘நோட்டா' ஓட்டு லோக்சபா தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நோட்டா

லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஓட்டு போட வேண்டாம். ஓட்டு போட விருப்பமில்லை என்று வாக்களியுங்கள் என்ற போஸ்டர் சென்னையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

நோட்டாவுக்கு சின்னம்

எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களுக்காக வாக்கு எந்திரத்தில் தனி பட்டன் உள்ளது. இந்த பட்டனுக்கும் ஒரு சின்னம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவேந்திர குல வேளாளர் அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளும் இந்த கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியிருக்கிறார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு

கானகம், களிக்குன்றம், பள்ளிப்பட்டு மக்களின் பல ஆண்டு கோரிக்கையான, ராஜிவ்காந்தி சாலையில் சிக்னல் அமைப்பது தொடர்பான கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அந்த பகுதிவாசிகள், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.

6 வழிச்சாலை

தரமணியை ஒட்டியுள்ள கானகம், களிக்குன்றம் பள்ளிப்பட்டு பகுதிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ராஜிவ்காந்தி சாலை, ஆறுவழிப்பாதையாக மாற்றப்படுவதற்கு முன், அந்த பகுதிவாசிகள், இந்திரா நகர் பாலம் வழியாக, அடையாறு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

சாலை இணைப்பு துண்டிப்பு

அதன் பின், சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மத்திய கைலாஷ் அல்லது டைடல் பார்க் என, 3 கி.மீ., துாரம் பயணித்து, செல்ல வேண்டியுள்ளது. இதை அடுத்து, கடந்த எட்டு ஆண்டுகளாக, இந்திரா நகர் பாலம் அருகே, ராஜிவ்காந்தி சாலையில் சிக்னல் அமைக்க வேண்டும் என, அந்த பகுதிவாசிகளும், நலச்சங்கத்தினரும், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வீடு வீடாக பிரச்சாரம்

முதல்வர் தனிப்பிரிவு, மேயர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் என, பலருக்கு, பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை அடுத்து, வரும் லோக்சபா தேர்தலில் 'எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டுப் போடாமல், 'நோட்டா' பட்டனை அழுத்துங்கள்' என, நலச்சங்கத்தினர், வீடு வீடாக சென்று, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டு கேட்டு வராதீர்கள்

இதுகுறித்து நலச்சங்கத்தினர் கூறுகையில், 'எங்களின் சிக்னல் கோரிக்கைக்கு அரசும், மாநகராட்சியும் செவி சாய்க்க வில்லை. தயவு செய்து எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு இந்த பகுதிக்கு வர வேண்டாம். இந்த பகுதிவாசிகளுக்கு, 'நோட்டா' பட்டன் குறித்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்

ஈரோடு-பழனி ரயில் திட்டத்தை செயல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் 3 மாவட்டங்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற 49 ஓ நோட்டோவை பயன்படுத்துமாறு மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக ரயில்வே மக்கள் பணி சங்கம் தெரிவித்துள்ளது.

நோட்டா விழிப்புணர்வு

தேர்தல் ஆணையம் 100 சதவிகித வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் ‘நோட்டா' ஓட்டை அறிமுகப் படுத்தியது. இளைய தலைமுறையினர் அரசியல் மீதும், ஊழல் அரசியல்வாதிகள் மீதும் கொண்டுள்ள வெறுப்பினால் ஓட்டு போடுவதில்லை. ஆனால் இந்த நோட்டா ஓட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அது தேர்தலில் பெரும் பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் இந்த ‘நோட்டா' பெரும்பங்காற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+