குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் காணவில்லை.. வாக்காளர் வழக்கால் பரபரப்பு
குன்னம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் காணவில்லை என்று வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரான ஆர்.டி. ராமச்சந்திரன் குன்னம் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இவரைக் காணவில்லை என்று வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆர்.டி.ராமச்சந்திரன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றதோடு சரி. மக்கள் என்ன ஆனார்கள். மக்கள் நலத் திட்டங்கள் என்ன ஆனாது என்பது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தொகுதி மக்களை மீண்டும் வந்து சந்திக்கவும் இல்லை. இதனால் அந்தத் தொகுதி மக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் கடுப்பான வாக்காளர் ஒருவர், குன்னம் தொகுதி எம்எல்ஏவான ஆர்.டி. ராமச்சந்திரன் காணவில்லை என்று வாக்காளர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு வர உள்ளது. இதே போன்று தொகுதிப் பக்கம் திரும்பிக் கூட பார்க்காத எம்எல்ஏக்கள் மீது வழக்குகள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications