சென்னையில் பெரும்பாலான இடங்களில் காலையிலேயே குவிந்த வாக்காளர்கள்... வெயிலுக்குப் பயந்து!
சென்னை: தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் காலையிலேயே ஓட்டுப் போடுவதற்கு மக்கள் அதிக அளவில் குவிந்ததால் சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு எடுத்த எடுப்பிலேயே களை கட்டி விட்டது.
232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் தொடங்கியது முதலே வாக்குப் பதிவு பல இடங்களில் விறுவிறுப்பாக காணப்படுகிறது.

குறிப்பாக வெயில் தாக்கம் அதிகம் உள்ள சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 7 மணிக்கே வாக்களித்து விட வேண்டும் என்ற வேகத்தில் வாக்காளர்கள் குவிந்து விட்டனர். இதனால் வாக்குச் சாவடிகளில் காலையிலேயே கூட்டம் களை கட்டியது.
பகலில் வெயில் அதிகம் இருப்பதால் வெயில் இல்லாத நேரத்திலேயே வாக்களித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர்கள் காலையிலேயே குழுமியதால் பல வாக்குச் சாவடிகளில் கூட்டம் அலை மோதியது.
அதேசமயம், தமிழகத்தின் தெற்கு மற்றும் உட்புற மாவட்டங்கள் சிலவற்றில் மழை பெய்து வருவதால் அங்கு காலையில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையைப் பொறுத்தவரை இரவில் மழை பெய்ததால் தற்போது வெப்பம் குறைந்து இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. பகலிலும் மழை வருமா என்று தெரியவில்லை. புறநகர்ப் பகுதிகளில் வெயில் அடிக்க ஆரம்பித்திருப்பதால் வழக்கம் போல வெயில் வெளுக்கும் என்றே தெரிகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications