ஏற்காடு இடைத்தேர்தல் செம விறுவிறுப்பு- 86% வாக்குகள் பதிவு!!
சேலம்: ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 86% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் கடந்த ஜூலை மாதம் காலமானார். அத்தொகுதிக்கான இடம் காலியாக உள்ளது. இதனால் ஏற்காடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க.சார்பில் வெ.மாறனும் மற்றும் 9 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி.

2 லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள்
ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 190 பேர். பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 94 பேர். திருநங்கைகள் 6 பேர்.

290 வாக்குச் சாவடிகள்
இவர்கள் வாக்களிக்க வசதியாக 120 இடங்களில் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அனைத்தும் பதற்றமானவை
இந்த 290 வாக்கு சாவடிகளுமே பதற்றமானவை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் அறிவித்திருந்தார்.

மூன்றடுக்கு பாதுகாப்பு
இதைத் தொடர்ந்து இந்த தொகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 4 மாவட்ட போலீசாரும், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீசார் என 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

86% வாக்குப் பதிவு
இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்றது, மாலை வரை 86% வாக்குகள் பதிவாகின.

வாக்களித்த வேட்பாளர்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் பி.சரோஜா பாப்பநாயக்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்களித்தார். முன்னதாக தமது கணவர் பெருமாளின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். இதேபோல் திமுக வேட்பாளர் வெ. மாறனும் தமது சொந்த ஊரில் வாக்கை பதிவு செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications