கர்நாடகத்தில் கன மழை.. மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியை எட்டியது
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 42,347 கன அடி வீதம் நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் நீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர், கபினி அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணை ஏற்கனவே தனது முழு கொள்ளவையும் எட்டியது. இந்நிலையில் கேரள வனப்பகுதியில் மழை நீடிப்பதால் கபினிக்கு மட்டுமே 33 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கபினி அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அனைத்தும் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கலில் வெள்ளம்
நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரிசல் போக்குவரத்துக்கும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகள்
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
90 அடியான மேட்டூர் அணை
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 3 அடி அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 90.9 அடியாக உள்ளது.
தண்ணீர் வரத்து
அணைக்கு விநாடிக்கு 42 ஆயிரத்து 347 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 52.86 டிஎம்சியாக இருக்கிறது. அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications