மேட்டூர் அணையின் நீர் மட்டம் 71 அடியை எட்டியது
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றது.

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் உபரி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியில் குளிக்கத் தடை
ஓகேனக்கல் அருவியில் நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக அதி கரித்து உள்ளதால் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் இன்று 10-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மூழ்கிய பாறைகள்
ஐந்தருவி, சினி அருவி ஆகிய பகுதிகளில் உள்ள பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் மேட்டூர் அணை நோக்கி பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நீர்மட்டம் 71.05 அடி
120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 71.05 அடியாக உள்ளது. அணைக்கு 36,772 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 33.60 டி.எம்.சி.யாக இருக்கிறது. அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மூழ்கிய நந்தி சிலை
அணையில் நீர் மட்டம் உயர்ந்து உள்ளதால் பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள மிகப்பழமையான ஜலகண்டேசுவரர் கோவிலும், நந்தி சிலையும் நீரில் மூழ்கி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பண்ணவாடியில் உள்ள கிறிஸ்தவ இரட்டைக் கோபுரமும் நீரில் மூழ்கிவிடும்.
பாசனத்திற்கு தண்ணீர்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications