ராஜஸ்தானில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்ட கலாமின் மெழுகு சிலை
ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்ட அப்துல் கலாமின் மெழுகு சிலை ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
ராமேஸ்வரம் : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மெழுகு சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், தனது பதவிக் காலத்துக்கு பின்னர் கல்லூரி, பள்ளி கருத்தரங்குகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவிற்குச் சென்றபோது அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி காலமானார்.

அவரது உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரூ.15 கோடியில் மணி மண்டபம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் 27-ஆம் தேதி கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளதால் அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார். அந்த விழாவில் ஒலிப்பதற்காக கலாம் குறித்து கலாம்....கலாம்... சலாம்....சலாம் என்ற பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்.
எழுச்சி நாயகன் கலாமுக்கு ஜெய்ப்பூரில் மெழுகு சிலை உருவாக்கப்பட்டது. அந்தச் சிலை ஜெய்ப்பூர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்துல் கலாமின் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று அந்தச் சிலையை ராமேஸ்வரத்துக்கு அனுப்பி உள்ளனர்.
அந்தச் சிலை 25 கிலோ மெழுகால் தயாரிக்கப்பட்டது. கலாமின் குடும்பத்தினர் அந்தச் சிலையை கலாம் அறிவுசார் மையத்தில் வைப்பதற்காக அதை தங்களுக்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் அந்த மெழுகு சிலையை ராமேஸ்வரத்துக்கு அனுப்பி உள்ளனர் அருங்காட்சியக அதிகாரிகள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications