மற்றவர்களைப் பற்றி கவலையில்லை.. தினகரன் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் தடாலடி பதில்!
சசிகலா, டிடிவி தினகரன் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் சூடுபறக்க தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக தினகரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் அதிமுக அம்மா அணி நிர்வாகிகளுடன் இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் மற்றவர்களைப் பற்றி கவலையில்லை என தடாலடியாக பதிலளித்தார்.
கட்சி விவகாரம் தொடர்பாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் நிலைப்பாட்டில் தாங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார். கட்சியையும் ஆட்சியைம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் வழிநடத்துகிறார் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே சசிகலாவையும் டிடிவி தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications