'தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்டோர் இல்லை; இடஒதுக்கீடும் வேண்டாம்'.. மதுரையில் ஒரு பிரகடனம்
மதுரை: "நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. அரசாங்கத்தின் எந்த சலுகையும், ஒதுக்கீடும் வேண்டாம்" என்று மதுரையில் நடைபெற்ற தேவேந்திரர் தன்னார்வ அமைப்பு பிரகடனம் வெளியிட்டுள்ளது.
தேவேந்திரர் டிரஸ்ட் அமைப்பு சார்பில் மதுரையில் நேற்று மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.

சாதி இருந்தே தீர வேண்டும்
இம்மாநாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதிலாக ஆண்டாள் பாசுரத்தைப் பாடினர். இந்நிகழ்ச்சியில் தேவேந்திரர் டிரஸ்ட் அமைப்பின் தலைவர் தங்கராஜ் பேசியதாவது:
நாட்டில் சாதிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெருமை உண்டு. அதனால்தான் கலப்பு திருமணம் வேண்டாம் என்கிறோம். அந்தந்த சாதிக்குள் திருமணம் செய்தால்தான் குடும்ப உறவுகள் சிதையாமல் இருக்கும். தமிழகத்தில் சாதிப்பிரச்னையே இல்லை.
தினமும் குளிக்காதவன், மாட்டுக்கறி சாப்பிடுகிறவன், சுத்தமில்லாதவன், இவர்கள்தான் தீண்டத்தகாதவன் என்று மனு சொல்கிறார். நாங்கள் அந்த பட்டியலில் இல்லை. எங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க மற்ற சாதியினரும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதனால், எங்களுக்கு எந்த சலுகையும் வேண்டாம். எங்கள் குல தெய்வமாக தேவேந்திரனாக அமித்ஷா தெரிகிறார்.
இவ்வாறு தங்கராஜ் பேசினார்.
சாதியால் உயர்ந்த இந்தியா
இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகையில், இந்தியாவில் சாதி அமைப்பை அழிக்க பலபேர் வந்தனர். புதிய சிந்தனைகளை வளர்த்தனர். சட்டங்கள் மூலம் சாதியை உடைக்க பார்த்தனர். இன்று இந்தியா உயர்ந்து நிற்பது சாதிகளால்தான். ஆகையால் சாதி இருக்க வேண்டும். நான் கூட போன பிறவியில் தேவேந்திரனாக பிறந்திருக்கலாம் என்றார்.
பின்னர் அமித்ஷா பேசுகையில், மத்திய பிரதேசத்தில் ஒரு மாநட்டில் ஒரு மாணவன் சமர்பித்த கட்டுரை மூலம், தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்று பசுவை வணங்கி, தேவேந்திரனை வழிபடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து உங்கள் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்பட்டது. இந்தியாவிலேயே அனைத்து சாதிகளும் எங்களை பி.சி. பட்டியலில் சேருங்கள் என்கிற போது எங்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம் என்பது நீங்கள்தான்..உங்களுக்காக பிரதமரிடம் பேசி நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பேன் என்றார்.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications