நாங்க மதராஸி இல்ல, படோஸி: இன்டர்நெட்டை கலக்கும் என்னடா ராஸ்கல்ஸ் வீடியோ
சென்னை: தென்னிந்தியாவில் உள்ள அனைவரும் மதராஸிகள் இல்லை என்பதை வட இந்தியர்களுக்கு தெரிவிக்க ஒரு பெண் உள்பட 4 பேர் அடங்கிய என்ன டா ராஸ்கல்ஸ் குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
வட இந்தியா பக்கம் சென்று நான் கேரளாவில் இருந்தோ அல்லது ஆந்திராவில் இருந்தோ வந்திருக்கிறேன் என்று கூறினால் ஓ மதராஸி என்பார்கள். அவர்களை பொறுத்த வரை ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலத்தவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். அதனால் பொதுவாக மதராஸி என்று அழைக்கிறார்கள்.
இந்நிலையில் தென்னிந்தியர்கள் அனைவரும் மதராஸிகள் இல்லை என்பதை வட இந்தியர்களுக்கு தெரிவிக்க என்னடா ராஸ்கல்ஸ் குழு முடிவு செய்தது.

5 மாநிலங்கள்
ஒரு பெண் உள்பட 4 பேர் அடங்கிய என்னடா ராஸ்கல்ஸ் குழுவினர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவை தனித்தனி அனைத்தும் மதராஸ் இல்லை என்பதை தெரிவிக்க வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

கேரளா
சபரிமலை, குருவாயூர், ஆலுக்காஸ், மீன் வறுவல், மோகன்லால், மம்மூட்டி, பி.டி. உஷா, அந்தோணி, உம்மான் சாண்டிக்கு கள்ளு பிடிக்காது, மலபார் பரோட்டா, லுங்கி அணியும் சேட்டா என்று கேரள மாநிலத்தவர் வீடியோவில் பாடுகிறார்.

கர்நாடகா
உடுப்பி, ஜோக் நீர்வீழ்ச்சி, ஹொய்சாலா கோவில்கள், கோகர்ணா, அக்கி ரொட்டி, பாயாசம், எம்.டி.ஆர். மசால் தோசை, மைசூர், ஹம்பி, பெங்களூரில் இன்போசிஸ், திப்பு சுல்தான், சி.வி. ராமன், ராஜ்குமார், ராகுல் டிராவிட், ஸ்ரீநாத் என்று கர்நாடக பெண் தங்கள் மாநிலம் பற்றி பாடுகிறார்.

ஆந்திரா
கொல்கொண்டா, சார்மினார், என்.டி.ஆர்., திருப்பதி லட்டு, மல்லேஸ்வரி, கோபிசந்த், சுஷீலா, ஜானகி, பிரம்மானந்தம், எஸ்.பி.பி., காக்கிநாடா, ஹைதராபாத், விஜயவாடா, தெலுங்கானா என்று ஆந்திர மாநிலத்தவர் பாடுகிறார்.

தமிழ்நாடு
திருநெல்வேலி அல்வா, மல்லிகைப்பூ, பன்னீர் சோடா, ஜிகர்தண்டா, ஸ்டைல்னா ரஜினி தான்டா, தந்தை பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர்., பாரதி, ராஜாஜி, கமல் ஹாஸன், சிவாஜி, திருக்குறள், பில்டர் காபி, மதுரை மீனாட்சி, மெரினா, மார்கழி, என் வழி தனி வழி, குவாட்டர் கட்டிங் இன் டாஸ்மாக், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு என்று தமிழகத்துக்காரர் பாடுகிறார்.

மதராஸி
அனைவரும் மதராஸி கிடையாது நாங்கள் எல்லாம் படோஸி(பக்கத்து பக்கத்து மாநிலத்தவர்கள்) என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப்
இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. யூடியூப்பில் இதுவரை இந்த வீடியோவை 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications