இது பஞ்ச பாண்டவர்கள் அணி... தேர்தலில் நாங்களே வெல்வோம்- இது முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: 2016 சட்டசபைத் தேர்தல் ஒரு அரசியல் போர். இந்த போரில் மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக வெற்றி பெறும். நாங்கள் பஞ்ச பாண்டவர்கள். நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது அதிமுகவிற்கும் மக்கள் நலக்கூட்டணி, தேமுதிகவிற்கு இடையேயான குருச்சேத்திர போர் இதில் இந்த பாண்டவர் அணி வெற்றி பெரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி இடையே கூட்டணியும், தொகுதி உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அறிவித்தனர். தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கூட்டணி உடன்படிக்கையில் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது அவர், 2016 சட்டசபைத் தேர்தல் ஒரு அரசியல் போர் என்று குறிப்பிட்டார்.
மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக பஞ்ச பாண்டவர்கள் என்று கூறிய அவர், கூட்டணியில் தோற்றது போல தேர்தலிலும் திமுக தோற்கும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
போர்க்களம் தயாராக இருக்கிறது. பாண்டவர்களாகிய நாங்களும் தயாராகிவிட்டோம் என்று கூறிய முத்தரசன், இந்த அரசியல் போரில் நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய , ஜி. ராமகிருஷ்ணன், எங்களின் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெறும். மார்ச் 23 தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத மகத்தான நாள். இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். மாவீரன் பகத்சிங் நினைவு நாளான இன்று மகத்தான கூட்டணி ஏற்பட்டுள்ளது. மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பார் என்றும் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications