வந்து பேசுங்க, பழையதை தர்றோம்.. வாங்கிட்டுப் போங்க.. தங்க தமிழ்செல்வன் அதிரடி!

அதிமுகவின் அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன், நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை என்றால் எங்கள் அணி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை : அதிமுகவை இணைக்க ஓ.பன்னீர்செல்வம் அணி நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அதனை ஏற்க முதல்வர் தயாராக இருப்பதாக எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அம்மா (ஈபிஎஸ்)அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா(ஓபிஎஸ்) அணி கட்சி ஒருங்கிணைப்புப் பணிக்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறிவிட்டு இரு தரப்பும் தங்கள் அணியை வலுப்படுத்தும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளன.

We are ready for talks without condition, MLA Thangatamilselvan

கட்சி இணைப்புக்கு தடையாக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணி கூறுவது, தங்கள் தரப்பில் முன்வைத்த முக்கிய 2 கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முரண்டு பிடித்துக் கொண்டு நிற்கின்றன. ஈபிஎஸ் அணியினர் அனைவரும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையை போல பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றே சொல்லி வருகின்றனர்.

இரு கோஷ்டிகள் இணைப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன், "அவர்கள் வைக்கும் கோரிக்கைகளையெல்லம் நிறைவேற்ற முடியாது, நிபந்தனைகற்ற பேச்சுவார்த்தை என்றால் எங்கள் முதல்வர் ரெடி. நிபந்தனையோட பேச்சுவார்த்தைனா நாங்க தயாரில்லை.

அவர்கள் வந்தால் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். ஏற்கனவே வகித்து வந்த பதவியை பெற்றச் செல்லலாம். நிபந்தனையில்லாத பேச்சுவார்தை இருந்தால் இரு தரப்புக்குமே சந்தோஷம் அவ்வளவு தான்" என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

அதிமுக அம்மா அணியில் இருந்து வெளியேறுவதாக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்த போது அவருக்கு ஆதரவாக எம்எல்ஏ வெற்றிவேல் தலைமையில் தினகரனுக்கு ஆதரவாக தனி அணி தொடங்க தங்க தமிழ்ச்செல்வன் திட்டமிட்டார். ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் அமைதியான வெற்றிவேலும், தங்கதமிழ்செல்வனும் எடப்பாடி அணிக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+