122 எம்.எல்.ஏக்கள் தமிழகம் கிடையாது.. நாங்கள்தான் உண்மையான அதிமுக.. ஓ.பன்னீர்செல்வம் அதிரடி பேட்டி

மக்களின் எண்ணப்படி, நாங்கள்தான் உண்மையான அதிமுக, என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை இன்று நீங்கள் வெளியிட போவதாக கூறினார்களே, அது என்ன அறிவிப்பு என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம்: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை மாபெரும், மக்கள் இயக்கமாக வளர்த்துள்ளார். அந்த மக்களின் எண்ணப்படி, நாங்கள்தான் உண்மையான அதிமுக, என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

We are the original AIADMK, claims Ex Chief Minister O.Pannerselvam

சட்டமன்ற உறுப்பினர்கள் மறுபக்கம் இருக்கிறார்கள், ஆட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்ற நிருபர் கேள்விக்கு, பதிலளித்த பன்னீர் செல்வம், "பத்திரிகையாளர்களுக்கு வரலாறு தெரியும். மக்களின் நாடித்துடிப்பு வினாடிக்கு வினாடி பத்திரிகையாளர்களுக்கு தெரியும். உங்களுடைய மனசாட்சிப்படி சொல்லுங்கள்.., தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகிற 1.5 கோடி அதிமுக தொண்டர்களும், 7.5 கோடி தமிழக மக்களும் எங்களுடன்தான் உள்ளனர். 122 சட்டசபை உறுப்பினர்கள் அதை நிர்ணயிக்க முடியாது என்றார்.

கட்சியை கைப்பற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வீர்களா என்ற கேள்விக்கு, "எதிர்காலத்தில் மக்கள் நீதிமன்றத்தில் இது உறுதியாக நிரூபிக்கப்படும்" என்றார் பன்னீர்செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+