'சின்னம்மா' தமிழ்ல எங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை- அதிமுக தொண்டர்கள்

அம்மான்னு கூப்பிட்ட வாயாலே சின்னம்மான்னு கூப்பிட மாட்டோம். யாரு இடத்தில வந்து யாரு சீன் போடறது நாங்க ஏத்துக்க மாட்டோம் என்பதுதான் அதிமு பெண் தொண்டர்களின் இன்றைய பேச்சாக உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் அம்மாதான் என்று வாய் வலிக்க முழக்கமிட்டவர்கள் அவர் மரணமடைந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே, சின்னம்மா அடுத்த பொதுச்செயலாளர், தமிழக முதல்வர் என்று கூறி வருகின்றனர்.

அம்மா... அம்மா என்று போஸ்டர் ஒட்டி பிளெக்ஸ் பேனர் வைத்தவர்கள், இப்போது சின்னம்மாவை பாராட்டி வீதி வீதியாக போஸ்டர் ஒட்டுகின்றனர். அதிமுக நிர்வாகிகள் எளிதாக சின்னம்மா பக்கம் சாய்ந்து விட்டனர். ஆனால் பெண் தொண்டர்களோ? அம்மா என்று சொன்ன வாயால் சின்னம்மா என்று சொல்ல மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

We can never call that person Chinnamma - ADMK workers

மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து ஒப்பாரி வைத்தும், கும்மி கொட்டியும் அஞ்சலி செலுத்துகின்றனர் பெண் தொண்டர்கள். 75 நாள் அம்மாவை உள்ள வச்சிருந்தாங்க. யாரையாவது பார்க்க விட்டாங்களா? என்ன பண்ணாங்க. இப்ப எங்க அம்மாவை இங்க அடக்கம் பண்ணிட்டாங்க.

அம்மா இறந்து ஒரு வாரம் ஆகுறதுக்கு முன்னாடியே சின்னம்மான்னு ஒருத்தவங்களை முன்னாடி நிறுத்துறாங்க. நாங்க எப்படி ஏத்துக்குவோம். நாங்க எப்படி அவங்களை கூப்பிடுவோம்.

அம்மாவுக்கு ஈடாகுமா? போஸ்டர்ல பார்க்க கூட அவங்களை எங்களுக்கு பிடிக்கலை. அம்மா இருந்த எடத்தில யாரையும் ஏத்துக்க மாட்டோம், தமிழ்ல எங்களுக்கு பிடிக்காத வார்த்தை சின்னம்மாதான் என்று பெண் தொண்டர்கள் பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் குமுறலை கொட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+