அதை விட அசிங்கம் வேற இல்லை... துரைமுருகன் ஆவேசம்
திருக்கோவிலூர்: அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சியமைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால் அதை விட அசிங்கம் வேறு இல்லை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு துரைமுருகன் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபாநாயகர் நடந்து கொண்டவிதத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே சமயம் வருகின்ற சட்டசபை கூட்டத்தொடரையும் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
அதிமுக எம்.எல்.ஏ. க்கள் நமக்கு ஆதரவு அளிக்க தயராக உள்ளதாகவும், அதனை பெற்று ஏன் திமுக ஆட்சி அமைக்கவில்லை என்றும் திமுகவினர் பலரே கேட்கிறார்கள். ஆதங்கப்படுகின்றனர். அந்தத் தவறை நாம் செய்து விடக் கூடாது. அதில் கருணாநிதி திட்டவட்டமாக உள்ளார்.
அதிமுக தயவில் நாம் ஆட்சி அமைத்தால் அதைவிட அசிங்கம் வேறு ஒன்றுமில்லை. திமுக எனும் மிகப்பெரிய இயக்கம், மக்களை சந்தித்து, மகத்தான வெற்றி பெற வேண்டும். இதுவே கருணாநிதியின் எண்ணம் ஆகும்.
அதற்காக நீங்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வரும். அதுவரை பொறுமை காக்கவேண்டும் என்றார் துரைமுருகன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications