அன்புமணியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது: தமிழிசை அதிரடி
சென்னை: பாமக இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி மக்களவை தொகுதி எம்.பியுமாகிய அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் எனவும் அவர் பாமகவின் முதல்வர் வேட்பாளர் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இல்லை எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், வருகிற 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு, பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி அமையும்; அந்த கூட்டணியின் சார்பில் அன்புமணி, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என, பா.ம.க., ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு கூட்டணி கட்சிகள் இடையே கடும் அதிருப்தி எழுந்தது. தமிழக பாஜக தலைவரும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத பாமக மத்தியில் மோடி அரசுடன் கூட்டணி மாநிலத்தில் கூட்டணி இல்லை எனவும் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சேர்ந்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம். அவ்வாறு கூட்டணியின் ஒப்புதல் பெற்ற ஒருவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். மேலும், 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications