ஜெ.மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் அச்சமில்லை... தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள்
ஜெ.மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் அச்சமில்லை என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை அமைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தெரிவித்தனர்.
அதிமுக அணிகள் இணைய முட்டுக்கட்டையாக இருந்த ஒரு கோரிக்கையான ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் அமைப்பது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான காலம் கனிந்துள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரனை சந்தித்த அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், அதிமுக அணிகள் இணைப்பில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவிடமாக்க உள்ளதை வரவேற்கிறோம் . ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதையும் வரவேற்கிறோம்.

டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் 10 அல்லது 20 பேர் சேர்ந்து கொண்டு யாரையும் நீக்கிவிட முடியாது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் அச்சமில்லை. ஜெயலலிதா வழியில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வதில் தவறில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications