சுவாதியை கொன்றது ராம்குமார்தான்.. எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது.. காவல்துறை சொல்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்போசிஸ் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில், ராம்குமார்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
கொலையாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இவ்வாறு அரசு தரப்பு தெரிவித்தது.

மேலும், ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கால அவகாசம் உள்ளதாகவும், 4 நாள் போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராம்குமார் கைது நடவடிக்கையில் மர்மம் இருப்பதாக ஊடகங்களில் சந்தேகம் வெளியிடும் நிலையில், காவல்துறை இவ்வாறு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications