திமுகவிற்கு பலமான தலைவர் கிடைத்திருக்கிறார்... எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது - துரைமுருகன்
திமுக தலைவர் கருணாநிதியை பல கட்சித்தலைவர்களும் கட்சி பேதமின்றி வாழ்த்துகின்றனர். திமுகவிற்கு பலமான தலைவர் ஸ்டாலின் கிடைத்மதிருக்கிறார் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பல கட்சித்தலைவர்களும் கட்சி பேதமின்றி வாழ்த்துகின்றனர். அனைவரையும் ஒருங்கிணைத்த பெருமை ஸ்டாலினையே சாரும். திமுகவிற்கு பலமான தலைவர் கிடைத்திருக்கிறார். இந்த இயக்கத்தை கட்டிக்காப்பார் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இந்த இயக்கத்தை எந்த கொம்பானாலும் அசைக்க முடியாது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் பணியாற்ற தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவை ஒட்டி வைரவிழா நடத்தப்பட்டு வருகிறது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டவிழாவில் தேசியத்தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

ராகுல்காந்தி, நிதிஷ்குமார், டெரிக் ஓ பிரையன், டி.ராஜா,சீதாராம்யெச்சூரி, நாராயணசாமி, திருநாவுக்கரசர் மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
விழாவுக்கு வந்துள்ள தேசிய தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி திமுக செயல் தலைவர் வரவேற்றார். அனைவருக்கும் மு.க. ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய துரைமுருகன், கருணாநிதியின் பெருமைகளை எடுத்துக்கூறினார்.
கருணாநிதியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 தலைமுறை தலைவர்களும் வாழ்த்தியுள்ளனர். அவரை கட்சி பேதமின்றி வாழ்த்துவதற்கு அனைவரும் வந்துள்ளனர்.
அனைவரையும் ஒருங்கிணைந்த ராஜதந்திரி ஸ்டாலின். இந்த இயக்கத்தை கட்டிக்காப்பார் தளபதி ஸ்டாலின் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் துரைமுருகன் கூறினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications