கத்தியை தீபாவளிக்கு அனுமதிப்போம், விஜய்யே வாங்கி தன் பெயரில் வெளியிட்டால்! - வேல் முருகன்
கத்தியை தீபாவளிக்கு அனுமதிக்க மாட்டோம். ஒரு வேளை நடிகர் விஜய்யே வாங்கி தன் பெயரில் வெளியிட்டால் எதிர்ப்பைக் கைவிடுவோம், என்றார் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் வேல் முருகன்.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வேல்முருகன் தலைமை வகித்தார். இதில் 150க்கும் மேற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், 'இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் கூட்டாளியாக உள்ள லைக்கா நிறுவனம் விஜய் நடிக்கும் கத்தி படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம்.

இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனர் ‘எங்களது 2 நாள் வருமானம்தான் இந்தக் கத்தி திரைப்படத்தின் தயாரிப்புச் செலவு' என்று கூறினார் அல்லவா..? அப்படியென்றால், வேறு ஏதாவது ஒரு நலிந்த தயாரிப்பாளரிடம் இந்த படத்தைக் கொடுத்து வெளியிடச் சொல்லலாமே.

இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர், விநியோகஸ்தர்களை சந்தித்து பேச உள்ளோம். சந்திப்பின்போது எங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கத்தி திரைப்படத்தை தீபாவளி அன்று தமிழகம் முழுவதும் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
ஒருவேளை நடிகர் விஜய்யே இந்தப் படத்தை தன் பெயரில் வாங்கி வெளியிட்டால் எதிர்ப்பு நிலையைக் கைவிடுவோம்,' என்றார்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications