ரஜினியே வேண்டாங்கிறேன்...எங்க வீட்ட நாங்க பாத்துக்கிறோம் - சீமான்
பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் வீட்டை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் குடும்பத்தை நாங்க காப்பாற்ற மாட்டோமா? என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஒரு வீட்டில் அப்பா சரியில்லை என்றால் மூத்த மகன் காப்பாற்ற மாட்டானா? பக்கத்து வீட்டுக்காரன், அண்டை வீட்டுக்காரன் தேவையில்லை என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகைக்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
அதே நேரத்தில் தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்று கூறி வரும் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தை காப்பாற்ற ரஜினி தேவையில்லை, நாங்களே பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஜினியை எதிர்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.

மண்டியிடக்கூடாது
தமிழ்நாட்டில் தமிழ்தாய் ஆட்சி நடக்கிறது. மற்ற இனத்தவர்களுக்கு தமிழ் இனம் மண்டியிடக்கூடாது. அப்படி மண்டியிட்டால் பெற்றோர் மேல் ஐயம், பிறப்பின் மேல் ஐயம் என்று கூறியுள்ளார் பாவலர் ஐயா.

போராடதவர்கள் ஆள்வதா
ஓடாத மானும், போராடாதவர்களும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. போராடுபவர்கள் பைத்தியக்காரர்களா?
கதிராமங்கலம், கூடங்குளம் போராட்டங்கள் பற்றி ரஜினியின் கருத்து என்ன? நிலைப்பாடு என்ன?

வகுப்பறை சரியாக இருக்கிறதா?
நாட்டில் சரியான வகுப்பறையில்லை. நிலவளம், மண்வளம் சரியில்லை. ஆறுகள், மலைகள், காடுகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதைப்பற்றி சிந்திக்காமல் எப்படி ஆள முடியும்.

நான் சரிசெய்வேன்
என் வீட்டில் எது எங்கே சரியில்லை என்பது எனக்குத் தெரியும். அதை நாங்கள் சரி செய்வோம். ரஜினி விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கட்டும். வீட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக கட்ட எங்களுக்குத் தெரியும்.

ரஜினி வேண்டாம்
ஒரு வீட்டில் அப்பா சரியில்லை என்றால் மூத்த மகன் பார்த்துக்கொள்வான். பக்கத்து வீட்டுக்காரனோ, அண்டை வீட்டுக்காரனோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. தத்துப்பிள்ளையாக கூட ரஜினியை ஏற்கத் தயாராக இல்லை. ரஜினியே வேண்டாங்கிறேன் என்று கூறியுள்ளார் சீமான்.

வெட்டி விட வருவதா?
தர்மத்தின் வழி நிற்பவர் எங்கள் தாய் நிலத்தை ஆள வரக்கூடாது. ஆன்மீக அரசியல் என்று கூறுகிறார் ரஜினி. போராடுபவர்கள் வேலையற்றவர்களா? ரஜினி வந்தால் நாடு நாசமாகிவிடும் மக்களும் நாசமாகிவிடுவார்கள் என்றும் எச்சரிக்கிறார் சீமான்.
-
சீமானுக்கு இங்கு ஓட்டு இல்லை! காரைக்குடிக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது - கார்த்தி சிதம்பரம் -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்!












Click it and Unblock the Notifications