சுட்டுப்பொசுக்க தமிழக மீனவர் உயிர் என்ன கிள்ளுக் கீரையா? - கொந்தளிப்பில் ராமேஸ்வரம்

மீனவர்களின் உயிர் கிள்ளுக்கீரையா என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளிப்புடன் கேட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழக மீனவர் ஒருவர் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பில்லையா? எங்களின் உயிர் அவ்வளவு அற்பமானதா என்று கொந்தளிப்புடன் மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கை சிங்கள வெறிப்படை மீண்டும் தனது ரத்த வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடற்பகுதியில் தாக்குதல் நடத்தி படகுகளை பறித்து சென்ற இலங்கை கடற்படையினர், இப்போது இந்திய கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து ஒரு மீனவரின் உயிரைப் பறித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் சில தினங்களாக தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். இலங்கை சிறையிலும் அடைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கச்சத்தீவில் விழா நடைபெற உள்ள நிலையில் விழாவை புறக்கணிப்போம் என்றும் மீனவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் ராமேஸ்வரம் கேட்டுக்கொண்டனர். பாம்பன் விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர் சுட்டுக்கொலை

மீனவர் சுட்டுக்கொலை

இந்தநிலையில் நேற்றிரவு இந்திய எல்லைப்பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ,22 என்ற மீனவர் உயிரிழந்தார். ஒரு மீனவர் பலத்த காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நிரந்தர தீர்வு

நிரந்தர தீர்வு

செய்தியாளர்களிடம் பேசிய விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ஜேசுராஜ், மீனவர் பிரச்னைக்கு இந்திய அரசு நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசு மௌனம் சாதிக்காமல் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மனித உயிருக்கு மதிப்பில்லையா?

மனித உயிருக்கு மதிப்பில்லையா?

விலங்குகளைக் கொன்றால் கூட அவர்களைப் பிடித்து சிறையில் போடுகின்றனர். ஆனால் மனிதர்களை குறிப்பாக மீனவர்களைக் கொன்றால் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டினார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டார். கடல்பகுதியில் எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2000 பேர் பாதிப்பு

2000 பேர் பாதிப்பு

கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டால் காரைக்கால் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளனர். 2000ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எராளமான மீனவர்கள் மாயமாகியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கையின் ரத்த வெறி தொடர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியா ராமேஸ்வரம் மீனவர் சுடப்பட்டுள்ளார் என்றும் மீனவர்கள் சங்க தலைவர் ஜேசுராஜ் கொந்தளிப்புடன் கூறியுள்ளார். எங்களின் உயிருக்கு பாதுகாப்பும், நிரந்தர தீர்வும் வேண்டும் என்பதே மீனவர்களின் வலியுறுத்தல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+