அப்பவே இதை செய்திருந்தால் இந்நேரம் அன்புமணி 2வது முறையாக முதல்வர் ஆகியிருப்பார்: ராமதாஸ்
விழுப்புரம்: அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுங்கள் என்று தமிழக மக்கள் தெரிவித்தனர். அவர்களின் பேச்சை கேட்டே தற்போது தனித்து போட்டியிடுகிறோம். இதை 15 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால் இந்நேரம் அன்புமணி 2வது முறையாக முதல்வர் ஆகியிருப்பார் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜசேகரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

தேர்தல் ஆணையம்
இனி வரும் காலங்களில் வேட்பாளர்களுக்கான துண்டறிக்கை, சுவரொட்டி உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையமே அச்சடித்து வழங்கி அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

குடிகார நாடு
தமிழக மக்கள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாறி, மாறி ஓட்டு போட்டனர். அதன் காரணமாக தமிழ்நாடு குடிகார நாடாக ஆகியுள்ளது. அதிமுக, திமுகவுடன் நாங்கள் மாறி, மாறி கூட்டணி வைத்தோம்.

தனித்து போட்டி
அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுங்கள் என்று தமிழக மக்கள் தெரிவித்தனர். அவர்களின் பேச்சை கேட்டே தற்போது தனித்து போட்டியிடுகிறோம். இதை 15 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால் இந்நேரம் அன்புமணி 2வது முறையாக முதல்வர் ஆகியிருப்பார்.

விவசாயிகள்
அதிமுக ஆட்சியில் 2 ஆயிரத்து 423 விவசாயிகளும், திமுக ஆட்சியில் 3 ஆயிரத்து 390 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவில் நீர்ப்பாசன திட்டத்தை பாமக செயல்படுத்தும். அதிமுகவும், திமுகவும் ரூ.4 ஆயிரம் கோடி மற்றும் ரூ.3 ஆயிரம் கோடியை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications