ஜெ. சிகிக்சை பற்றி டாக்டர்கள் சொன்னதை நம்பினோம்.. அப்பவே ஆலோசித்தேன்.. ஓபிஎஸ்
ஜெயலலிதாவிற்கு கொடுத்த சிகிச்சை பற்றி டாக்டர்கள் சொன்னதை நாங்களும் நம்பினோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தூத்துக்குடி: நான் முதல்வராக இருந்த போதே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சில மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அப்பல்லோ டாக்டர்கள் சொன்னதை முழுமையாக நம்பியதாகவும் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அரசியல் காரணத்துக்காக தமக்கே உரிய பாணியில் விதவிதமாக யாரும் சிந்திக்காத கருத்துகளை கூறுவது மு.க.ஸ்டாலினுக்கு வாடிக்கை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியும், மரணத்தில் உள்ள மர்மங்களை மக்கள் அறிந்து கொள்ளவே சிபிஐ விசாரணை கேட்பதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் நம்பினோம்
தொடர்ந்து பேசிய, ஓ. பன்னீர் செல்வம், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது யாராலும் அவரை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருந்தது. டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் குறிப்புகளை கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் வெளியிட்டனர். அதனை நாங்களும் நம்பினோம்.

சிபிஐ விசாரணை
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்டு உள்ள மர்மங்கள், சந்தேகங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அதிகாரிகளிடம் ஆலோசனை
நான் முதல்வராக இருந்த போதே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சில மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.

அவசியமில்லை
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்களை வெளியிடுவோம் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கூறி உள்ளார். அவர் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications